Musk's 'X' is a competitor to WhatsApp Messenger, with special features  google
உலகம்

வாட்ஸ்அப் மெசேஞ்சருக் இணையான போட்டி : எலான் மஸ்க்கின்‘எக்ஸ் சாட்’ : சிறப்பு அம்சங்கள்!

மெட்டாவின் வாட்ஸ்அப் மெசேஞ்சருக்கு போட்டியாக எலான் மஸ்க் தனது நிறுவனத்தின் மூலம் ‘எக்ஸ் சாட்’ என்ற புதிய மொபைல் போன் மெசேஜிங் செயலியை அறிமுகம் செய்துள்ளார.

Rohini

புதிய செயலி அறிமுகம்

மெட்டாவின் வாட்ஸ்அப் மெசேஞ்சருக்கு இணையான போட்டியாக எலான் மஸ்க் தனது எக்ஸ் நிறுவனத்தின் மூலம் ‘எக்ஸ் சாட்’ என்ற புதிய மொபைல் போன் மெசேஜிங் செயலியை சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளார.

ஐஓஎஸ் ஆப் ஸ்டோரில் மட்டுமே பயன்படுத்த முடியும்

இந்த புதிய செயலியானது இப்போதைக்கு ஆப்பிள் போன்களை கொண்டுள்ள ஸ்மார்ட்போன் பயனர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கபட்டுளள்து .

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐஓஎஸ் ஆப் ஸ்டோரில் இந்த செயலி அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

எக்ஸ் சாட் அதன் உள்ளடக்க செயல்பாடு

- எக்ஸ் சாட் மூலம் பயனர்கள் மெசேஜிங், ஃபைல் ஷேரிங், ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள், குரூப் சாட் மேற்கொள்ள முடியும்.

இப்போதைக்கு இந்த செயலியை எக்ஸ் தள பயனர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

ஆண்ட்ராய்டு இயங்கு தலத்தில் வெளியாகும் குறித்த தகவல் இல்லை

தற்போது வெளியாகி இருக்கும் இந்த செயலி . ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் எப்போது அறிமுகமாகும் என்பது குறித்து எக்ஸ் நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.

இதன் சிறப்பம்சங்கள்

இந்த செயலியின் முக்கிய சிறப்பம்சங்களாக

‘எண்டு-டூ-எண்ட்’ என்கிரிப்ஷன் அம்சம் உள்ளது. இதன் மூலம் மெசேஜை அனுப்பும், பயனர் தவிர வேறு யாரும் அதை ஆக்சஸ் செய்ய முடியாது என எக்ஸ் தெரிவித்துள்ளது.

இதில் PIN அம்சம் இருப்பதாகவும் எக்ஸ் தெரிவித்துள்ளது.

481 பேர் வரை ஒரு குழுவில் எக்ஸ் சாட் செயலி மூலம் உரையாடலாம்

இதில் விளம்பரம் என்பது இருக்காது என எக்ஸ் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. அதற்கென பிரத்யேக கொள்கை முடிவையும் பகிர்ந்துள்ளது

இந்த செயலியில் பயனர்களை மறைமுகமாக டிராக் செய்யும் நடவடிக்கை எதுவும் இருக்காது என்றும் எக்ஸ் கூறியுள்ளது

மிகவும் எளிதான வகையில் பயனர் அனுபவம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இதை எக்ஸ் வடிவமைத்துள்ளது

மெசேஜ்களுக்கான சிறப்பு பாதுகாப்பு

இதில் மெசேஜ்கள் தானாகவே மறைந்து போகும் Disappearing Messages அம்சம் உள்ளது

மேலும், பயனர்கள் மெசேஜ்களை எடிட் செய்யும் அம்சமும் உள்ளது. இதில் ஸ்க்ரீன் ஷாட்கள் எடுக்க முடியாது

46 உலக மொழிகளில் இந்த செயலியை பயன்படுத்தலாம்

எக்ஸ் தளத்தில் உள்ளவர்கள் மட்டுமே இதை பயன்படுத்த முடியும்

மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் பயனர்களின் தகவல் தொடர்பு விவரங்களை சேமித்து, பகுப்பாய்வு செய்து, அதை விர்ச்சுவலாக பயன்படுத்தும் முறையிலும் ,

முடியும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் எக்ஸ் சாட் அறிமுகமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

===========