Nepal's Prime Minister at 35: Who is this Balendra Shah source:google
உலகம்

35 வயதில் நேபாளத்தின் பிரதமர் : யார் இந்த ராப் சிங்கர் பாலேந்திர ஷா!

நேபாளத்தில் பாலேந்திர ஷாவின், ராஷ்ட்ரிய சுதந்திரக் கட்சி மாபெரும் வெற்றியை பதிவு செய்து ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

S Kavitha

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோக வெற்றது. இதையடுத்து ராப் பாடகரும், முன்னாள் மேயருமான பாலேந்திர ஷா பிரதமராகிறார்.

நேபாளத்தில் கடந்த 5 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் 35 வயதான ராப் பாடகரும் முன்னாள் மேயருமான பாலேந்திர ஷாவின், ராஷ்ட்ரிய சுதந்திரக் கட்சி மாபெரும் வெற்றியை பதிவு செய்து தற்போது ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

யார் இந்த பாலேந்திர ஷா

பாலேந்திர ஷா நேபாலில் புகழ்பெற்ற ராப் இசை பாடகர். 2022 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரை காத்மாண்ட்டின் 15 ஆவது மேயராக பணியாற்றினார்.

மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சுயேட்சை வேட்பாளர் என்ற கூடுதல் சிறப்பையும் பெற்றவர் பாலேந்திர ஷா.

பிரதமர் வேட்பாளர்

35 வயதே ஆன பாலேந்திர ஷா காத்மாண்ட் மேயர் பதவியை ராஜினாமா செய்த பின்னர், ராஷ்ட்ரிய சுதந்திரக் கட்சியில் தன்னை இணைத்துகொண்டார். பின்னர் நேபாள பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார்.

நேபாள பொதுத்தேர்தல்

இந்நிலையில், நேபாள பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,மிதிலா பிராந்தியத்தின் மைதிலி மொழி பேசும் சமூகத்தில் இருந்து முதல் பிரதமராகவும் , அதேபோல் நேபாளத்தின் பிரதமராகப் பணியாற்றும் முதல் மதேஷியா நேபாளி என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

ஏன் பாலேந்திர ஷாவிற்கு இளைஞர்கள் ஆதரவு

நேபாளத்தில் கடந்த கே.பி.சர்மா ஒலி தலைமையிலான ஆட்ச்ஹியின் போது, ஊழல் அதிகரிப்பு, இளைஞர்களுக்கு போதிய வேலையின்மை, சமூக சமத்துவமின்மை, மற்றும் சமூக ஊடகங்களுக்கு தடை முதலானவற்றிற்கு எதிராக Gen Z' இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.

2025 -ல் கவிழ்ந்த ஆட்சி

இதனால் அப்போதைய ஆட்சி கவிழ்ந்தது. மடகஸ்கரிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்த போராட்டங்களின் போது பாலேந்திர ஷா ஆதரவு தெரிவித்திருந்தார்.

கே.பி. சர்மா ஒலி ராஜினாமா

இளைஞர்களின் கடும் எதிர்ப்பால் அப்போதைய பிரதமர் கே.பி. சர்மா ஒலி செப்டம்பர் 9, 2025 அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்த இளைஞர்கள், அப்போதைய காத்மாண்டு மேயர் பாலேந்திர ஷாவை இடைக்காலப் பிரதமராகப் பதவியேற்க அழைத்தனர்.

ஆனால் அவர் அதை மறுத்துவிட்டார். தான் முறையாகத் தேர்தலில் போட்டியிட்டு வெல்ல விரும்புவதாகத் தெரிவித்தார்.

பாலேந்திர ஷா வெற்றி பெற காரணம்

'Gen Z' இளைஞர்களின் போராட்டங்களுக்குப் பிறகு நடைபெற்ற இந்த பொதுத் தேர்தலில், பாலேந்திர ஷாவின் ஆர்.எஸ்.பி. கட்சியை இளைஞர்கள் ஆதரித்துள்ளனர். அதன் படி நாடாளுமன்றத் தோ்தலில் மகத்தான வெற்றியின் மூலம் இளம் தலைவா் பாலேந்திர ஷா பாலன் பிரதமராகிறார்.

முன்னர் அவர் சொன்னதைப் போலவே இடைக்கால பிரதமராக இல்லாமல் தேர்தலில் முறையாக நின்று வெற்றி பெற்றுள்ளார்.