"No money to pay the electricity bill? A robot in China begging with a QR code card goes viral on social media."  google
உலகம்

‘‘மின்​சார கட்​ட​ணத்தை செலுத்த பணம் இல்​லை : சீனாவில் கியூஆர் கோடுடன் யாசகம் கேட்கும் ரோபோ : சமூக வலைதளத்தில் வைரல்

மின்​சார கட்​ட​ணத்தை செலுத்த பணம் இல்​லை. எனவே யாசகம் அளித்து உதவுங்​கள் என்று ரோபா ஒன்று, உருக்​க​மாக யாசகம் கோரியுள்ளது

Rohini

யாசகம் கேட்ட ரோபோ

சீ​னா​வில் கியூஆர் கோடு அட்​டை​யுடன் ஒரு ரோபோ தெரு​வில் மண்​டி​யிட்டு யாசகம் கோரும் வீடியோ தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவிவரு​கிறது.

வீட்டு மற்றும் பேரிடர் மீட்பு பணியில் ரோபோ

சீனா​வின் ஹாங்சோ நகரை தலை​மை​யிட​மாகக் கொண்டு யூனிட்ரீ ரோபோடிக்ஸ் என்ற நிறு​வனம் ரோபோக்கள் உற்பத்தியில் செயல்பட்டு வருகிறது

,இந்த நிறு​வனம் மனித வடிவி​லான ரோபோக்​களை உற்​பத்தி செய்து வரு​கிறது. இதில் ஒரு ரோபோ​வின் ஆரம்ப விலை ரூ.16 லட்​ச​மாக உள்ளது.

குறிப்பாக இந்த ரோபோக்​கள் பெரும்​பாலும் வீட்டு உபயோக பணிகளுக்கு பயன்​படுத்​தப்​படு​கின்​றன. தீயணைப்பு உள்​ளிட்ட பேரிடர் மீட்​புப் பணி​களி​லும் இவை ஈடு​படுத்​தப்​படு​கின்​றன.

ரோபோக்களை பிரபலப்படுத்த நூதன விளம்பரம்

யூனிட்ரீ ரோபோடிக்ஸ் நிறு​வனம் தனது ரோபோக்​களை மக்களிடம் பிரபலப்​படுத்தி கொண்டு சேர்க்கும் வை நூதன விளம்​பரத்தை கையாண்டு வருகிறது அதன்படி, சீனா​வின் சிச்​சு​வான் மாகாண தலைநகர் செங்​டூ​வில் யூனிட்ரீ நிறு​வனத்​தின் ஒரு ரோபோ, கியூஆர் கோடு அட்​டை​யுடன் யாசகம் கோரி வரு​கிறது.

யாசகம் கோரும் ரோபோ

இந்த ரோபோ மண்​டி​யிட்டு அமர்ந்​து, கைகளை கூப்பி யாசகம் கோரு​கிறது. ‘‘மின்​சார கட்​ட​ணத்தை செலுத்த பணம் இல்​லை. எனவே யாசகம் அளித்து உதவுங்​கள்’’ என்று ரோபா உருக்​க​மாக கூறியுள்ளது

சமூக வலைதளங்களில் வைரல்

யாசகம் எடுக்​கும் இந்த ரோபா​வின் வீடியோ தற்போது சமூக் அ வலை​தளங்​களில் வைரலாகி வரு​கிறது. செங்டூ மட்​டுமன்றி தலைநகர் பெய்​ஜிங் உள்​ளிட்ட நகரங்​களி​லும் யூனிட்ரீ ரோபோடிக்ஸ் நிறு​வனம் சார்பில் இதே பாணி​யில் நூதன விளம்​பரம் மேற்​கொள்​ளப்​பட்​டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

=================