Nothing New’: India Reacts to Pakistan’s Reward Offer on Masood Azhar Google
உலகம்

Masood Azhar Reward Row : பாகிஸ்தானின் 70 லட்சம் அறிவிப்பு ஒரு நாடகம் : இந்தியா கடும் விமர்சனம்..!

ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் குறித்து தகவல் அளிப்போருக்கு பரிசு அறிவித்த பாகிஸ்தான்; கடுமையாக விமர்சித்த இந்திய வெளியுறவுத்துறை ...

NARENDRAN K

யார் இந்த மசூத் அசார்?

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவரான மசூத் அசார், இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புபடுத்தப்பட்டு வருகிறார்.

குறிப்பாக 2019-ம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்கு பின்னர், அவரது பெயர் சர்வதேச அளவில் அதிக கவனம் பெற்றது.

ஐக்கிய நாடுகள் சபையும் அவரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது.

மசூத் அசார் விவகாரத்தில் புதிய சர்ச்சை :

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு 70 லட்சம் பாகிஸ்தான் ரூபாய் பரிசு வழங்கப்படும் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே புதிய அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

70 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்த பாகிஸ்தான் :

பாகிஸ்தானின் Federal Investigation Agency (FIA), மசூத் அசாரை தேடப்படும் நபராக அறிவித்து, அவரைப் பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை 50 லட்சத்தில் இருந்து 70 லட்சம் பாகிஸ்தான் ரூபாயாக உயர்த்தியுள்ளது.

இந்த நடவடிக்கை சர்வதேச அளவிலும் கவனம் பெற்றுள்ளது.

"இது வெறும் நாடகம்" - இந்தியா விமர்சனம் :

இந்த விவகாரம் குறித்து நேற்று கருத்து தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், பாகிஸ்தானின் இந்த அறிவிப்பை கடுமையாக விமர்சித்தார்.

மசூத் அசார் குறித்து பரிசு அறிவிப்பது போன்ற நடவடிக்கைகள் புதிதல்ல என்றும், இது வெறும் "நாடகம்" மற்றும் "போலியான அறிவிப்பு" என்றும் அவர் தெரிவித்தார்.

"உண்மையான நடவடிக்கை எடுக்க வேண்டும்"

மசூத் அசார் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, இதுபோன்ற அறிவிப்புகள் பிரச்சினைக்கு தீர்வாகாது என இந்தியா வலியுறுத்தியுள்ளது.

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் பாகிஸ்தான் உண்மையான அர்ப்பணிப்பை காட்ட வேண்டும் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் வார்த்தைப் போர் :

பாகிஸ்தானின் பரிசு அறிவிப்பை இந்தியா "வெறும் கண்துடைப்பு நடவடிக்கை" என விமர்சித்துள்ள நிலையில், இந்த விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையே புதிய வார்த்தைப் போரை உருவாக்கியுள்ளது.

மசூத் அசார் குறித்து உண்மையான நடவடிக்கை எடுக்கப்படுமா அல்லது இது அரசியல் விவாதமாக மட்டுமே நீடிக்குமா என்பது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

===================