Nvidia CEO jansen Haung step down ongoing controversy and New CEO Galot grace has Appointed for MID Term period Ai Generated
உலகம்

NVIDIA CEO பதவியில் இருந்து விலகிய ஜென்சன் ஹுவாங்! : இடைக்கால CEO-வாக கோலெட் கிரெஸ் நியமனம்..!

33 ஆண்டுகளாக NVIDIA நிறுவனத்தை வழிநடத்திய ஜென்சன் ஹுவாங் பதவி விலகல்; அவருக்கு பதிலாக இடைக்கால CEO-வாக கோலெட் கிரெஸ் நியமனம்...

NARENDRAN K

NVIDIA நிறுவனத்தில் திடீர் தலைமை மாற்றம் :

உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான NVIDIA-வில் முக்கியமான தலைமை மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத தகவல் வெளியாகியுள்ளது.

அந்நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஜென்சன் ஹுவாங் தனது CEO பதவியில் இருந்து விலகியுள்ளார்.

சுமார் 33 ஆண்டுகளாக நிறுவனத்தை வழிநடத்தி வந்த அவர், தற்போது இந்த பொறுப்பிலிருந்து விலகியிருப்பது தொழில்நுட்ப துறையில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

33 ஆண்டுகால NVIDIA பயணத்துக்கு முற்றுப்புள்ளி :

1993ஆம் ஆண்டு தனது நண்பர்களுடன் இணைந்து NVIDIA நிறுவனத்தைத் தொடங்கியவர் ஜென்சன் ஹுவாங். ஆரம்பத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மற்றும் கேமிங் துறைக்கான சிப்களை உருவாக்கி வந்த இந்த நிறுவனம், பின்னர் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வளர்ச்சியில் உலகின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக மாறியது.

குறிப்பா AI தொழில்நுட்பங்களை பயிற்றுவிக்கவும், இயக்கவும் பயன்படுத்தப்படும் GPU சிப்கள் தயாரிப்பில் NVIDIA முக்கிய இடத்தை பிடித்தது.

யார் இந்த கோலெட் கிரெஸ்?

ஜென்சன் ஹுவாங்குக்கு பதிலாக இடைக்கால CEO-வாக நியமிக்கப்பட்டுள்ள கோலெட் கிரெஸ், 2013ஆம் ஆண்டு முதல் NVIDIA நிறுவனத்தின் CFO-வாக பணியாற்றி வருகிறார்.

இதற்கு முன்பு Microsoft, Cisco உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் நிதித்துறை சார்ந்த முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். தற்போது CEO பொறுப்புடன் சேர்த்து CFO பொறுப்பையும் தொடர்ந்து கவனிக்க உள்ளார்.

நிரந்தர CEO நியமிக்கப்படும் வரை இவர் இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக செயல்படுவார் என NVIDIA தெரிவித்துள்ளது.

பதவி விலகலுக்கு பின்னால் சர்ச்சைகள்?

ஜென்சன் ஹுவாங்கின் பதவி விலகல் அறிவிப்பு வெளியாகும் முன்பா, அவருடைய தனிப்பட்ட உறவுகள் தொடர்பாக சில சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியாகியிருந்தன.

குறிப்பா சீன உளவாளி என சந்தேகிக்கப்படும் பெண் ஒருவருடன் அவருக்கு தொடர்பு இருந்ததாகவும், நிறுவனத்தை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவருடனும் உறவு இருந்ததாகவும் சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

NVIDIA நிறுவனத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

இதற்கிடையே, NVIDIA நிறுவனத்தின் இயக்குநர் குழுவின் முதல் தலைவராக ஹார்வி சி. ஜோன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

நிரந்தர CEO-வைத் தேர்வு செய்வதற்கான பணிகளையும் இயக்குநர் குழு தொடங்கியுள்ளது.

இதற்காக நிறுவனத்துக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள தகுதியான நபர்கள் பரிசீலிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

===================