On Going Geo political senario Trump AND PM modi and discussed several things through phone call Ai Generated
உலகம்

டிரம்புடன் மோடி தொலைபேசி பேச்சு : வர்த்தகம் முதல் பாதுகாப்பு வரை முக்கிய ஆலோசனை!

இந்தியா - அமெரிக்கா உறவுகளை மேலும் வலுப்படுத்துவது, வர்த்தக ஒப்பந்தம், பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக தகவல்...

NARENDRAN K

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை :

இப்பொழுது சென்று கொண்டிருக்ககூடிடய அரசியல் சூழ்நிலையில் இந்த இரு தலைவர்களின் உரையாடல் உலகளவில் கவனம் பெற்றது மட்டுமல்லாமல் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது அதிகார்வபூர்மாக செல்போனில் அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் தான் உரையாடியதாக பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார் .

இருவரும் பேசியது என்ன ?

இந்த இரு தலைவர்களின் பேச்சானது மிக முக்கியமாக வணிகம் பாதுகாப்பு ஏறி சக்தி மற்றும் இரு நாட்டு உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவருகின்றன.

அதுமட்டுமல்லாமல் சர்வதேச அரசியல் சூழ்நிலைகள் ரஷ்யா உக்ரைன் போர் மத்திய கிழக்கு போர் பதற்றங்கள் ,ஹோர்மோஸ் நீரினை விவகாரங்கள் போன்ற பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாக தெரியவருகிறது

வரி விதிப்பிற்கு பிறகு இந்த பேச்சுவார்த்தை :

சமீபத்தில் இந்திய மீது நூறு சதவீத வரி விதிப்புக்கு பிறகு அமெரிக்கா அதிபரும் இந்தியா பிரதமரும் தொலைபேசியில் பேசியிருப்பது பெரும் விவாதப்பொருளை சர்வதேச அரசியல் வட்டாரங்களில் ஏற்படுத்தியுள்ளது .

எனவே இந்த பேச்சு வார்த்தையில் அது குறித்து எதையேனும் பேச பட்டதா என்ற தகவல் அதிகாரபூர்வமாக வெளிவரவில்லை .

டிசம்பர் மாத நடக்கவிருக்கும் ஜி-20 மாநாடு :

இந்த வருடம் இறுதியில் அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் ஜி மாநாட்டிற்கு இந்திய பிரதமரை அமெரிக்கா அதிபர் தொலைபேசி வாயிலாகா அழைத்திருக்ககூடும் என உறுதிப்படுத்த படாத தகவல் உலாவி வருகின்றன .

இருப்பினும் அந்த கூட்டமானது மிக முக்கியமாக உலக அளவில் பார்க்கப்படுவதால் அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது .

உலக அளவில் நிலவும் போர் சூழல் குறித்து பேச்சு :

மிக முக்கியமாக இரு தலைவர்களும் தற்பொழுது நடைபெற்று கொண்டிருக்கக்கூடிய உக்ரைன் ரஷ்யா போரை எப்படியாவது முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பேசியிருப்பதாக தகவல்கள் வருகின்றன.

ஏனென்றால் சமீபத்தில் அமெரிக்காவின் ஆயுத கையிருப்பு அளவானது குறைந்து வருவதாகவும், அது அமெரிக்கா ராணுவத்திற்கு வருங்காலத்தில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்பதலையும் எப்படியாவது ,இந்த போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என டிரம்ப் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன .

==================