Oscars Award Function Streaming Rights Got YouTube To Host Academy Awards Beginning 2029 Read News in Tamil YouTube
உலகம்

Oscar : ஆஸ்கர் ஒளிபரப்பு நிகழ்ச்சி - உரிமம் இனி யூடியூப்க்கு தான்!

Oscars Award Function Streaming Rights Got YouTube : ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பு உரிமத்தை யூடியூப் தளம் பெற்றது என்று தகவல் வெளியாகியுள்ளது.

Baala Murugan

ஆஸ்கர் விருதின் மகத்துவம் :

Oscars Award Function Streaming Rights Got YouTube : திரைத்துறையின் உயரிய அங்கீகாரமாக ஆஸ்கார் விருதுகள் பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதிலும் இருந்து படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. வருடந்தோறும் அமெரிக்காவில் இந்த விழா பிரம்பாண்டமாக நடத்தப்படுகிறது. உலகெங்கிலும் இருந்து திரைபிரபலங்கள் அமெரிக்காவில் கூடுவர். ஆஸ்கர் விருது பெறுவோர் சினிமா துறையில் மிக உயர்ந்தவராக மதிக்கப்பட்டு, ஆஸ்கர் நாயகன் என்று அழைக்கப்படுவர். சினிமாவை தாண்டி ஆஸ்கர் என்னும் உயரிய விருதை பெறுவது சினிமா நட்சத்திரங்களுக்கு பலரின் கனவாகவே இருக்கிறது என்றால் மிகையாகாது.

ஆஸ்கர் ஒளிபரப்பை வாங்கிய யூடியூப்

ஆனால் இந்த ஆஸ்கர் நிகழ்ச்சியை அமெரிக்காவின் ABC தொலைக்காட்சி ஒளிபரப்பி வந்தது. 2028 வரை ஆஸ்கார் விழாவை ஒளிபரப்பும் உரிமையை ABC தொலைக்காட்சி நிறுவனம் தன்வசம் வைத்துள்ளது.

2028-ல் ஆஸ்கார் விருதின் 100-வது ஆண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் 2029-ஆம் ஆண்டு முதல் 2033 வரை ஆஸ்கார் விருதுகளின் உலகளாவிய ஒளிபரப்பு உரிமையை யூடியூப் தளம் பெற்றுள்ளது. கூகுள் நிறுவனத்திற்குச் சொந்தமான யூடியூப் தளம் 200 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்டுள்ளது.

யூடியூப்பில் ஆஸ்கர் விருது நிகழ்ச்சி

இந்த ஒப்பந்த காலத்தில் பிரபலங்களின் சிவப்பு கம்பள வரவேற்பு, விருதளிக்கும் நிகழ்வு என ஆஸ்கார் தொடர்பான அனைத்து நிகழ்வுகளும் யூடியூப்பில் மட்டுமே வெளியாகும். இதற்காக யூடியூப்பில் பிரத்யேக டிஜிட்டல் தளம் ஒன்றும் உருவாக்கப்பட உள்ளது. இதன்படி ஆஸ்கார் விருதுகள் விழா உலகெங்கிலும் இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்கர் அகடாமி

இந்த மாற்றத்தினால் ஆஸ்கார் விருதுகளின் பார்வையாளர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆஸ்கார் விருதுகளுக்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தரும் என்றும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களைச் சென்றடைய இது மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்று ஆஸ்கார் அகடாமி மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.