The Pakistani government has raised the prices of petroleum products by up to two times. source : google
உலகம்

பாகிஸ்தானில் வரலாறு காணாத விலை உயர்வு : பெட்ரோல் ரூ.458.40, டீசல் ரூ.520.35 : மானியம் வழங்கும் அரசு!

Pakistan Petrol Price Today in Indian Rupees : பாகிஸ்தான் அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலையை இரண்டு மடங்கு வரை உயர்த்தியுள்ளது.

S Kavitha

The Pakistani government has raised the prices of petroleum products by up to two times.

Pakistan Petrol Price Today in Indian Rupees : 20 லிட்டர் வரை லிட்டருக்கு 100 ரூபாய் மானியம், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 1,500 ரூபாய் மானியம் : பாகிஸ்தான் அரசு !

ஈரான் - இஸ்ரேல் அமெரிக்க போர் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக, அண்டை நாடான பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இதுவரை இல்லாத அளவாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அதிரடி விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

விலை உயர்வுப் பட்டியல்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பைக் காரணம் காட்டி, பாகிஸ்தான் அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலையை இரண்டு மடங்கு வரை உயர்த்தியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

அதன்படி டீசல் ஒரு லிட்டருக்கு 54.9% உயர்த்தப்பட்டு, தற்போது 520.35 பாகிஸ்தானிய ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 42.7% உயர்த்தப்பட்டு, 458.40 பாகிஸ்தானிய ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போர்ச் சூழலும், ஹார்முஸ் நீரிணையும்

ஈரானுக்கும் அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுப் படைகளுக்கும் இடையிலான போர் ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில், ஈரான் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் நீரிணையை முழுமையாக மூடியுள்ளது. இதன் காரணமாக உலகளாவிய எரிபொருள் போக்குவரத்து முடங்கியுள்ளது.

இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு மட்டும் அனுமதி

இருப்பினும், இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் கப்பல்கள் மட்டும் ஹார்முஸ் நீரிணையைக் கடக்க ஈரான் அனுமதி அளித்துள்ளது.

ஈரானின் இந்தத் தடையை நீக்காவிட்டால் தரைவழித் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளதால், மேலும் போர் மூளும் அபாயம் எழுந்துள்ளது.

மானியங்கள் மற்றும் கட்டுப்பாடுகள்

இந்நிலையில் கடும் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான், அந்நாட்டு மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் சில அறிவிப்புகளை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது:

  • இருசக்கர வாகனங்களுக்கு மாதம் 20 லிட்டர் வரை லிட்டருக்கு 100 ரூபாய் மானியம்.

  • விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 1,500 ரூபாய் மானியம் அளிக்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

அஃப்ரிடி கோரிக்கை

இந்த இக்கட்டான பொருளாதாரச் சூழலில் மக்கள் அரசாங்கத்திற்குப் பக்கபலமாக இருக்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அஃப்ரிடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டின் முன்னேற்றத்திற்காக அரசு எடுக்கும் கடினமான நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

====