PM Modi and Giorgia Meloni Funny Conversation Viral at G7 Summit  source: google
உலகம்

"இன்ஸ்டாவில் நாம் தான் Famous!" : ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியிடம் நகைச்சுவையாக கூறிய இத்தாலி பிரதமர் மெலோனி!

ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடியை சந்தித்த இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, "இன்ஸ்டாகிராமில் நாம் தான் Famous" என நகைச்சுவையாகப் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Kavitha prasanna

PM Modi and Giorgia Meloni Funny Conversation Viral at G7 Summit

ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி - இத்தாலி பிரதமர் மெலோனி

பிரான்ஸ் நாட்டின் ஈவியன் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச ஜி7 உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். உலகளாவிய முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்ற இந்த மாநாட்டின் இடையே, உலகத் தலைவர்கள் அனைவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்வின் போது, இந்தியப் பிரதமர் மோடியும் இத்தாலியின் பெண் பிரதமர் ஜார்ஜியா மெலோனியும் நேரில் சந்தித்துப் பேசினர்.

இந்திய பிரதமர் - இத்தாலி பிரதமர்

அப்போது பிரதமர் மோடியைப் பார்த்த மெலோனி, "உங்களை மீண்டும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி" என்று தனது வரவேற்பைத் தெரிவித்தார்.

நாம் தான் மிகவும் பிரபலமான ஜோடி

அதற்குப் பதிலளிக்கும் விதமாகப் பிரதமர் மோடி 'இன்ஸ்டாகிராம்' என்று புன்னகையுடன் கூறத் தொடங்கினார். உடனே குறுக்கிட்ட மெலோனி சிரித்துக்கொண்டே, "ஆமாம், இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் உலகளவிலேயே நாம் தான் மிகவும் பிரபலமானவர்கள்" என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

அவர்கள் இருவருக்கும் இடையே நடந்த இந்த சுவாரஸ்யமான உரையாடல் அங்கிருந்த மைக்கில் பதிவாகி, தற்போது இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இணையத்தில் ட்ரெண்டிங்

பொதுவாகவே, பிரதமர் மோடியும் ஜார்ஜியா மெலோனியும் சந்திக்கும் போதெல்லாம் அது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் ட்ரெண்டிங்காவது வழக்கம்.

வைரலாகும் 'மெலோடி'

கடந்த முறை பிரதமர் மோடி இத்தாலிக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட போது, அவர்கள் இருவரும் ஒரே காரில் பயணித்தது முதல் ஒன்றாக உணவு அருந்தியது வரையிலான வீடியோக்கள் நெட்டிசன்களால் 'மெலோடி' என்ற பெயரில் வைரலாக்கப்பட்டன.

மெலோனிக்கு 'மெலோடி' என்ற சாக்லேட்

அந்த சமயத்தில் மெலோனிக்கு 'மெலோடி' என்ற சாக்லேட்டை பிரதமர் மோடி பரிசாக வழங்கியதும் பெரும் பேசும்பொருளாக மாறியது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர்களின் புதிய வீடியோவும் உலகளவில் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

=====