ரொனால்டோ வாழ்க்கை
Cristiano Ronaldo Retirement Plans : ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த கால்பந்து ஜாம்பவான் தான் இந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ. சிறுவயது முதல் கால்பந்தில் ஆர்வம் கொண்ட இவர், பல்வேறு இன்னல்களுக்கு இடையில் கால்பந்தில் முன்னேறி தனக்கான இடைத்தை பிடித்து, உலக சாம்பியனாக அனைவருக்கும் அறிமுகமாகியுள்ளார்.
ரொனால்டோ ரசிகர் பட்டாளம்
உலகத்தில் அதிக நபர்களால் பார்க்கப்படும் மற்றும் ரசிகர் பட்டாளம் அதிகம் உள்ள விளையாட்டு என்றால் அது கால்பந்து தான். இந்த பட்டாளத்தில் 50 சதவிகிதம் ஏன் 70 சதவிகித நபர்கள் ரொனால்டோ ரசிகர்கள் என்றால் மாற்றத்தக்கது அல்ல. இந்நிலையில், நேரில் மட்டுமல்லாது, சமூக வலைதளங்களிலும் ரொனால்டோ புதிதாக ஓபன் செய்த யூடியூப் சேனலைஒரே நாளில் பணாமாக்கி(மானிடைஸ்) உள்ளனர் அவரின் ரசிகர்கள் என்றால், அவரின் ரசிகர்கள் எவ்வளவு பெரிய பட்டாளம் என்று நம் சிந்தித்து பார்க்க வேண்டிய ஒன்றுதான்.
ரொனால்டோ சாதனை
போர்ச்சுகலை சேர்ந்த கால்பந்தாட்ட ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ (40). தன் வாழ்நாளில் 950க்கும் அதிகமான கோல்களை(Cristiano Ronaldo Record) அடித்து சாதனை படைத்தவர். போர்ச்சுகல் அணிக்காக 223 போட்டிகளில் விளையாடி 141 கோல்களுடன் சர்வதேச கால்பந்தில் அதிக கோல் அடித்த வீரராகவும் ரொனால்டோ ஒரு சரித்திர நாயகனாக வலம் வருகிறார்.
கோடிகளுக்கு விளையாடும் ரொனால்டோ
இந்நிலையில், தற்போது சவுதி அரேபியாவின் அல் நஸர் அணிக்காக, பல்லாயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் ஆடி வருகிறார். ரொனால்டோ ஒரு பில்லியன் டாலர் சொத்து மதிப்பை அடைந்த முதல் கால்பந்து வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார். அவருடைய சொத்து மதிப்பு 1.4 பில்லியன் டாலராக ( சுமார் 11 ஆயிரம் கோடிக்கு மேல்) அதிகரித்துள்ளது. 40 வயதான இவர் ஓய்வு எப்போது என்று ரசிகர்கள் மத்தியில் பரபரபாக பேசப்பட்டதை அடுத்து, அதற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு மனம் திறந்துள்ளார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
மேலும் படிக்க : இந்திய ஆஸ்திரேலிய மோதல்- இடையில் வந்த மழையால் வெற்றி யாருக்கு?
காணொளியில் ஓய்வு குறித்து அறிவித்த ரொனால்டோ
ஓய்வு குறித்து காணொளியின் மூலம் பகிர்ந்து கொண்ட ரொனால்டோ(Cristiano Ronaldo Retirement) கடந்த 25 வருடங்களாக கால்பந்துக்காக எல்லாவற்றையும் செய்துவிட்டேன். அநேகமாக ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் விளையாடுவேன் என்று நினைப்பதாக கூறியுள்ளார். மேலும், 2026ம் ஆண்டு உலகக் கோப்பைக்குப் பின் ஓய்வு பெறுவேன் என்று தெரிவித்துள்ளார். எனவே, வருகிற 2026ல் ரொனால்டோ ஆடுவது, 6வது உலகக் கோப்பை போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் இந்த பேச்சு தற்போது இணைய தளங்களில் வைரலாகி வரும் நிலையில், ரொனால்டோவின் ரசிகர்கள் தங்களது வருத்தங்களை பதிவு செய்து வருகின்றனர்.