அதிரடி காட்டும் டொனால்டு டிரம்ப்
Donald Trump Announces Warrior Dividend As Christmas Gift To US Military : அமெரிக்க அதிபராக 2வது முறை பொறுப்பேற்ற பிறகு அதிரடி காட்டி வரும் டொனால்டு டிரம்ப், இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் வரி, விசா மற்றும் குடியேற்றத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் என தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
கூடுதல் வரி விதிப்பால் வருவாய் உயர்வு
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நமது நாட்டு பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்து வருகிறது அமெரிக்கா. இதேபோன்று பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அமெரிக்க அரசு எதிர்பார்த்ததை விட அதிக வருவாய் கிடைத்து வருகிறது.
படை வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு
இதை மக்களுக்கு பகிர்ந்து அளிக்கும் வகையில், வீரர்களுக்கு பரிசாக இந்த தொகை வழங்கப்படுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்து இருக்கிறார். நாட்டு மக்களுக்காக உரையாற்றிய அவர், ”பாதுகாப்பு துறையின் படை பிரிவுகளில் பணியாற்றி வரும் வீரர்களுக்கு இன்பஅதிர்ச்சி கொடுத்தார்.
வீரர்களுக்கு ரூ.1.60 லட்சம் பரிசு
சேவையாற்றி வரும் சர்வீஸ மெம்பர்களுக்கு (பாதுகாப்பு படை வீரர்கள்) 1,776 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.60 லட்சம்)மதிப்பிலான செக் வழங்கப்படும் என்று அறிவித்தார். 14 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு இந்தத் தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கான காசோலை வீரர்களை நோக்கி செல்கிறது.
படை வீரர்களுக்கு பாராட்டு
பிற நாடுகள் மீது விதித்த வரியால் நினைத்ததை விட அதிக பணம் சம்பாதிக்கிறோம். இதனால் அது நமக்கு பெரியளவில் உதவுகிறது. அதன் பலனை பெறுவதில் நம்முடைய ராணுவ வீரர்களை விட யாருக்கும் அதிக தகுதி இல்லை என்று நினைக்கிறேன். அவர்களுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்'' என்று டிரம்ப் தெரிவித்தார்.
படை வீரர்கள் உற்சாகம்
அதிபர் டிரம்பின் இந்த அறிவிப்பு அமெரிக்க படை வீரர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அவர்கள் மேலும் உற்சாகத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர்.
===