அமெரிக்க நல்லுறவில் விரிசல்
Washington : 'PM Narendra Modi A Great Man, Friend': Could' Visit India Next Year Donald Trump Says : ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய பொருட்கள் மீது 50 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்து இருந்தார். இதன் காரணமாக அமெரிக்காவில் இந்திய பொருட்கள் விற்பனை பலமடங்கு குறைந்து விட்டது. இருநாடுகள் இடையேயான சுமூக உறவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
மாற்று வழியில் இந்தியா
மீண்டும் நல்லுறவை வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் வரி விதிப்பு காரணமாக, ரஷ்யா மற்றும் சீனாவுடன் இந்தியா கோர்த்து இருப்பதோடு, மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரித்து இருக்கிறது. மேலும் உள்நாட்டு பொருட்களை பயன்படுத்தும் போக்கும் இந்தியர்களிடம் அதிகரித்து உள்ளது. இதற்கு காரணம் மத்திய பாஜக அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகள் தான்.
மோடி சிறந்த மனிதர்
இந்தநிலையில், வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அதிபர் டிரம்ப், “ ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா பெரும்பாலும் நிறுத்திவிட்டது. பிரதமர் மோடி ஒரு சிறந்த மனிதர்.
வர்த்த பேச்சுவார்த்தை சிறப்பு
அவர் என்னுடைய நண்பர், நாங்கள் பேசுகிறோம், அவர் நான் அங்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறார். நான் செல்வேன். பிரதமர் மோடி உடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் சிறப்பாக நடந்து வருகிறது.
அடுத்த ஆண்டு இந்தியா வருகை
அடுத்த ஆண்டு இந்தியாவுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டு இருக்கிறீர்களா என்று நிருபர்கள் கேட்டபோது, 'இருக்கலாம், ஆம்' என்று டிரம்ப் பதிலளித்தார். இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் அதிபர் டிரம்ப் பங்கேற்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
மோடியை புகழ்ந்து தள்ளிய டிரம்ப்
பிரதமர் மோடியை டிரம்ப் புகழ்ந்து பேசுவது இது முதன்முறை கிடையாது. அவர் பலமுறை மோடியை சிறந்த நண்பர், சிறந்த மனிதர் என பாராட்டி இருக்கிறார். அதேசமயம், இந்தியா மீது கூடுதல் வரி விதித்து, நட்புறவில் விரசலை ஏற்படுத்தியதோடு, அமெரிக்க மக்களும் அவர் மீது கோபத்தில் இருக்கிறார்கள். இதன் காரணமாகவே பல்வேறு மாகாணங்களில் நடைபெற்ற தேர்தல்களில் டிரம்பின் குடியரசு கட்சி படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
===