Prime Minister Narendra Modi has embarked on a state visit to three countries AI generated
உலகம்

இந்தோனேசியா, ஆஸ்திரேலியா : அரசுமுறை பயணம் தொடங்கினார் மோடி : 40 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து செல்லும் இந்திய PM...

மூன்று நாடுகளுக்கு அரசுமுறை பயணத்தை தொடங்கி இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

Kannan

மூன்று நாடுகளுக்கு பயணம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 6 நாள் அரசுமுறை பயணமாக இந்தோனேசிய, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு செல்கிறார்.

இந்தோனேசியா சென்றார் மோடி

அதன்படி பிரதமர் மோடி இன்று இந்தோநேசியாவுக்கு புறப்பட்டு சென்றார். இன்று முதல் 8-ஆம் தேதி வரை இண்ட்தோனேசியாவில் தங்கி இருக்கும் அவர், அந்நாட்டு அதிபர் பிரபோவோவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இந்திய வம்சாவளியினருடன் சந்திப்பு

ஜகார்த்தாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரிடையே பிரதமர் உரையாற்ற உள்ளார். இதனைத் இந்தோனேசியாவில் உள்ள யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றான யோக்யகர்த்தாவில் உள்ள பிரம்பனன் கோயில் வளாகத்தையும் பிரதமர் மோடி பார்வையிடுகிறார். இது பிரதமரின் நான்காவது இந்தோனேசியப் பயணமாகும்.

ஆஸ்திரேலியா செல்கிறார்

இந்தோனேசியாவிலிருந்து 8ம் தேதி ஆஸ்திரேலிய செல்லும் பிரதமார் அங்கு 10ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு ஆஸ்திரேலிய கவர்னர் ஜெனரல் சாம் மோஸ்டினை சந்திக்க உள்ளார்.

‘இந்திய-ஆஸ்திரேலிய தலைமைச் செயல் அதிகாரிகள் மன்றக்’ கூட்டத்தில் பங்கேற்று, இரு நாடுகளையும் சேர்ந்த முன்னணித் தொழில் தலைவர்கள் மத்தியில் பிரதமர் உரையாற்ற உள்ளார். \

கடைசியாக நியூசிலாந்து பயணம்

இதனைத்தொடர்ந்து, ஜூலை 10-ஆம் தேதி நியூசிலாந்து செல்லும் அவர் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையே நிலவும் வலுவான மக்கள் இடையிலான உறவை வெளிப்படுத்தும் விதமாக, இந்திய வம்சாவளியினர் கலந்து கொள்ளும் கூட்டத்திலும் பிரதமர் உரையாற்ற உள்ளார்.

1986ம் ஆண்டு அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி, நியூசிலாந்து சென்றிருந்தார். அதன்பிறகு, இந்திய பிரதமர்கள் யாரும் நியூசிலாந்து செல்லவில்லை.

இந்தநிலையில், 40 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி அங்கு செல்வது குறிப்பிடத்தக்கது.

================