Prime Minister of Australia personally praised Al Ahmed, a real-life hero who caught the terrorist who opened fire in Australia Google
உலகம்

பயங்கரவாதியை மடக்கிய ’Real Hero’ : பாராட்டி தள்ளிய ஆஸி. பிரதமர்

Australia Shooting Bondi Hero Al Ahmed : ஆஸ்திரேலியாவில் துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதியை வெறும் கைகளால் மடக்கி பிடித்த அல் அஹமது என்ற ரியல் ஹீரோவை, அந்நாட்டு பிரதமர் நேரில் சென்று பாராட்டினார்.

Kannan

தந்தை, மகன் துப்பாக்கிச்சூடு

Australia Shooting Bondi Hero Al Ahmed : ஆஸ்திரேலியாவின் பாண்டை கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பொதுமக்கள் 16 பேர் கொல்லப்பட்டனர். யூதர்களுக்கு எதிரான இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது, பாகிஸ்தானைச் சேர்ந்த தந்தை - மகன் என்பது தெரிய வந்துள்ளது.

மடக்கி பிடித்த தீரர்

பாண்டை கடற்கரையில் பயங்கரவாதி ஒருவன் பொதுமக்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, ஒருவர் பின்னால் இருந்து சாமர்த்தியமாக மடக்கி பிடித்தார். தன்னிடம் எந்த ஆயுதமும் இல்லை என்றாலும், வெறும் கைகளால் பயங்கரவாதியை தாக்கி அவன் பயன்படுத்திய துப்பாக்கியையும் பறித்தார்.

குவியும் பாராட்டுகள்

இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி, அவரது அசாத்திய தைரியத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அந்த நபர், சிட்னியின் சதர்லேண்ட் பகுதியில் வணிக வளாகம் நடத்தி வரும் அல் அஹமது, வயது 40 என்பது தெரியவந்துள்ளது.

மக்களை காப்பாற்ற காண்பித்த தீரம்

மேற்காசிய நாடான சிரியாவைச் சேர்ந்த அவரது குடும்பம் அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை ஏற்க முடியாமல், அல் அஹமது, தனது உயிரை பணயம் வைத்து இந்த காரியத்தை ஈடுபட்டார்.

மருத்துவமனையில் அனுமதி

அவரின் தீரம், மேலும் பலரது உயிர் பறிபோகாமல் இருக்க உதவியது. தீவிரவாதியை மடக்கி பிடித்த போது ஏற்பட்ட காயம் காரணம்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அல்-அஹமது.

ஆஸ்திரேலிய பிரதமர் பாராட்டு

அவரை ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ் நேரில் சென்று நலம் விசாரித்தார். இது தொடர்பாக, அவர் வீடியோவை சமூகவலைதளத்தில் பகிர்ந்து கூறியிருப்பதாவது, அஹமது நீங்கள் ஒரு ஆஸ்திரேலிய ஹீரோ.

ஆஸ்திரேலிய மக்கள் சார்பாக நன்றி

சிட்னி கடற்கரையில் மக்களை காப்பாற்ற உயிரை பணயம் வைத்து பயங்கரவாதியிடம் இருந்த துப்பாக்கியை பிடிங்கி சரணடைய வைத்த உங்களுக்கு ஒவ்வொரு ஆஸி., மக்களின் சார்பாகவும் நான் நன்றி கூறுகிறேன். இவ்வாறு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறியுள்ளார்.

======