நீடிக்கும் போர்
ஈரான், அமெரிக்க இடையே நீடிக்கும் போர் சூழல் காரணமாக , பல்வேறு நாடுகளும் வர்த்தக ரீதியாக சரிவை சந்தித்து வருகிறது. இதனால் உலகவில் கச்சா எண்ணெய் விலை உச்சத்தை ஈட்டி வருகிறது.
இதனால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயும் வீழ்ச்சியயை சந்தித்து வருகிற்து.
ஈரான் நாணய மதிப்பு கடும் வீழ்ச்சி
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுடனான போர்ப் பதற்றம் காரணமாக ஈரானின் நாணயமான ரியால் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
டாலருக்கு நிகரான ரியால் மதிப்பு சரிவு
நீடித்து வரும் போர்ல ,அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரானிய நாணயமான ரியாலின் மதிப்பு 18.1 லட்சமாக சரிந்து புதிய உச் சத்தைத் தொட்டுள்ளது. கடந்த நாட்களில் மட்டும் ரியால் மதிப்பு 15 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம்
டாலருக்கு நிகரான ஈரானிய நாணயமான ரியாலின் மதிப்பு வீழ்ச்சியயையே சந்தித்துள்ளதால் ,பால், ரொட்டி போன்ற முக்கிய அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
அதுபோல ஒரு யூரோவுக்கு எதிரான ரியாலின் மதிப்பு24.4 லட்சம் ரியால்களாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
================