RBI Global Tender for Polymer Plastic Currency Notes India BRBNMPL 2026
இந்தியாவில் காகித ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக, விரைவில் பிளாஸ்டிக் அல்லது பாலிமர் நோட்டுகள் புழக்கத்திற்கு வரவுள்ளன. இதற்கான முதற்கட்ட நடவடிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தற்போது எடுத்துள்ளது.
BRBNMPL - Global Tender
ஆர்பிஐ-யின் அதிகாரப்பூர்வ நோட்டு அச்சடிக்கும் பிரிவான பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முத்ரன் பிரைவேட் லிமிடெட் (BRBNMPL), உலகளாவிய முன்னணி நிறுவனங்களிடமிருந்து பாதுகாப்பான பாலிமர் தாள்களை வழங்குவதற்கான விண்ணப்பங்களை (Global Tender) அதிகாரப்பூர்வமாக கோரியுள்ளது.
2014-லேயே திட்டமிடப்பட்ட பைலட் பிராஜெக்ட்
இந்தியாவில் பிளாஸ்டிக் கரன்சியைக் கொண்டு வரும் முயற்சி இது முதன்முறையல்ல. இதற்கு முன்பாகவே, கடந்த 2014-15 ஆம் ஆண்டிலேயே நாட்டின் 5 முக்கிய நகரங்களான கொச்சி, மைசூர், ஜெய்ப்பூர், சிம்லா மற்றும் புவனேஸ்வரில் 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை சோதனை முறையில் (Pilot Project) அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டிருந்தது.
உலகளாவிய டெண்டர்
தற்போது அந்தத் திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று, நாடு முழுவதும் அமலாக்கும் நோக்கில் இந்த உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு?
இருப்பினும், முதற்கட்டமாக எந்த மதிப்புள்ள நோட்டுகள் அதாவது ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100 நோட்டுகள் பிளாஸ்டிக்கில் அச்சிடப்படும், அவை எப்போது பொதுமக்களிடம் புழக்கத்திற்கு வரும் என்பதை ரிசர்வ் வங்கி இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.
அதேசமயம் இந்தியாவுக்காக வடிவமைக்கப்படும் இந்த சிறப்பு மூலப்பொருளை வேறு எந்த மூன்றாம் நாட்டுக்கும் விற்கக் கூடாது என்றும் நிபந்தனை பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
3 ஆண்டு அனுபவம்
எந்தெந்த நாட்டு நிறுவனங்கள் இதற்கு விண்ணப்பிகலாம் என்றால், ஒரு நாட்டின் மத்திய வங்கிக்கோ அல்லது நோட்டு அச்சடிக்கும் நிறுவனத்திற்கோ கடந்த 3 ஆண்டுகளாகப் பாலிமர் நோட்டுப் பொருட்களை வழங்கிய அனுபவம் உள்ள சர்வதேச நிறுவனங்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
=====