Ready to Contribute to Global Energy and Food Security: Russian President Putin Reaffirms Commitment Google
உலகம்

உலகளாவிய எரிசக்தி, உணவுப் பாதுகாப்பிற்கு பங்களிக்க தயார் : ரஷ்ய அதிபர் புதின் உறுதி !!!

BRICS வணிக மாநாட்டில் பேச்சு; விநியோகச் சங்கிலி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த ரஷ்யா தயார் என அறிவிப்பு ...

NARENDRAN K

BRICS மாநாட்டில் புதின் முக்கிய பேச்சு :

டெல்லியில் நடைபெற்று வரும் BRICS உச்சி மாநாட்டின் வணிக அமர்வில் உரையாற்றிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கு ரஷ்யா தொடர்ந்து பங்களிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

எரிசக்தி துறையில் ரஷ்யாவின் பங்கு :

உலகின் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியாளர்களில் ஒன்றாக இருக்கும் ரஷ்யா, பல நாடுகளின் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.

தற்போதைய உலக சூழலில் நிலையான எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்வது அவசியம் என புதின் வலியுறுத்தினார்.

உணவுப் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம்

உலக உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சிகளிலும் ரஷ்யா தனது பங்களிப்பை தொடரும் என்று புதின் கூறினார்.

குறிப்பாக உணவுப் பொருட்கள் மற்றும் உர விநியோகத்தில் ஒத்துழைப்பை அதிகரிக்க BRICS நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

BRICS நாடுகளுக்கு அழைப்பு :

தொழில்நுட்பம், முதலீடு, வர்த்தகம் மற்றும் கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் BRICS நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், உலக பொருளாதார வளர்ச்சியில் BRICS முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்றும் புதின் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உலகின் கவனம்

18வது BRICS உச்சி மாநாட்டில் 11 உறுப்புநாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ள நிலையில், புதினின் இந்த கருத்து மாநாட்டின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

============