Rs 52 lakh prize for having a baby: Singapore government's bold announcement! source:ai
உலகம்

குழந்தை பெற்றுக் கொண்டால் ரூ.52 லட்சம் பரிசு : சிங்கப்பூர் அரசு அதிரடி அறிவிப்பு..!

இந்த உயர்த்தப்பட்ட நிதி உதவி சலுகை 2023 பிப்ரவரி 14-க்குப் பிறகு பிறந்த குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும்.

Kavitha prasanna

Rs 52 lakh prize for having a baby: Singapore government's bold announcement!

சிங்கப்பூரில் குறைந்து வரும் மக்கள் தொகையை அதிகரிக்கக் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெற்றோருக்கு ரூ.52 லட்சம் வரை வழங்க அரசு அறிவிப்பு.

மக்கள் தொகையை உயர்த்த புதிய திட்டம்

சிங்கப்பூரில் நாளுக்கு நாள் குறைந்து வரும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தவும், பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவும் பிரதமர் லாரன்ஸ் வாங் தலைமையிலான அரசு புதிய தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ரூ. 52 லட்சம் முதல் ரூ.53 லட்சம் வரை நிதி உதவி

இதன் ஒரு பகுதியாக, குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு சுமார் ரூ. 52 லட்சம் முதல் ரூ.53 லட்சம் வரை நிதி உதவி மற்றும் போனஸ் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் பின்னணியும் நோக்கமும்

குழந்தை வளர்ப்புச் செலவு, கல்வி மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தான கவலைகள் காரணமாக இளம் தம்பதியினர் குழந்தைப்பேற்றைத் தள்ளிப்போடுகின்றனர். மேலும், பலர் ஒரு குழந்தையோடு நிறுத்திக்கொள்கின்றனர்.

இதைக் கருத்தில் கொண்டு, தேசிய தின உரையில் பிரதமர் லாரன்ஸ் வாங் நாடு முழுவதும் குழந்தைப் பேற்றை ஊக்கப்படுத்த விரும்புவதாகத் தெரிவித்தார்.

குழந்தை போனஸ் திட்ட விவரங்கள்

2023-இல் தொடங்கப்பட்ட குழந்தை போனஸ் திட்டம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, புதிதாகக் குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு ரூ. 53 லட்சம் வரை போனஸாக வழங்கப்படும்.

வழங்கப்படும் முறை

இந்தத் தொகை குழந்தையின் 17 வயது வரை ஆண்டுதோறும் தவணை முறையில் பெற்றோருக்குக் கிடைக்கும்.

இந்த உயர்த்தப்பட்ட நிதி உதவி சலுகை 2023 பிப்ரவரி 14-க்குப் பிறகு பிறந்த குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும்.

நிதி உதவி மட்டுமன்றி, குழந்தைகளின் பராமரிப்புச் செலவு மற்றும் கல்விச் செலவைக் கணிசமாகக் குறைப்பதற்கான கூடுதல் திட்டங்களையும் சிங்கப்பூர் அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

======