மரண விகிதம் குறைகிறது :
Russia China Research on Lifespan Extend And Defeat Death : 21ம் நூற்றாண்டில் நவீன மருத்துவம் மூலம், மனிதர்களின் சகல நோய்களுக்கும் மருந்துகள், அறுவை சிகிச்சைகள் கைவசம் இருக்கின்றன. எனவே, நோயால் ஒருவர் மரணம் அடைவது என்பது தவிர்க்கப்பட்டு கொண்டே வருகிறது. உடல் உறுப்புகள் செயலிழப்பு, புற்றுநோய் போன்ற நோய்களால் பாதிக்கப்படுவோர் மட்டுமே மரணத்தை தழுவுவதில் இருந்து தப்ப முடிவதில்லை.
ஆயுளை நீட்டிக்க தொடர் ஆராய்ச்சிகள் :
மனிதனின் ஆயுட்காலத்தை 100 ஆண்டுகளுக்கும் மேலாக நீட்டிப்பது(Research on Lifespan Extend) குறித்து உலக அளவில் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இருந்தாலும், இந்த விவகாரத்தில் ரஷ்யாவும், சீனாவும் கூடுதல் கவனம் செலுத்தி தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.
இளமையை தக்கவைக்க ரஷ்யா முனைப்பு :
ரஷ்யாவில் இந்த ஆய்வுகள் வேகம் பெற்று இருக்கின்றன. எத்தனை வயதானாலும் இளமையை அப்படியே தக்க வைத்து கொள்ளவும், இயன்றவரை மரணத்தை தள்ளிப்போடவும் தீவிர ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 9 ஆண்டுகளில் 50 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக Novaya Gazeta Europe என்ற பத்திரிக்கை தெரிவித்து இருக்கிறது.
ஆய்வுகளுக்கு அதிக அளவில் நிதி :
இந்த ஆண்டு மட்டும் ஆய்வுகளுக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் இந்திய ரூபாய் மதிப்பில் 4,300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அப்பத்திரிகை தெரிவித்து இருக்கிறது. அதிபர் புதினின்(Vladimir Putin Daughter) மகள் மரியா வொரன்ட்சோவா தலைமையில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்படுவதாகவும், ரஷ்யாவில் அரசு துறைகள் தவிர, தனியார் நிறுவனங்களும் வயது மூப்பை தடுத்து மனிதனின் வாழ்நாளை நீட்டிப்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மரணத்தை வெல்ல முடியுமா? :
72 வயதாகும் அதிபர் விளாதிமிர் புதின், தற்போது துடிப்பான நபராக உள்ளார். வயது மூப்பை தடுப்பது, இறவாநிலை குறித்த ஆய்வுகளில் அவருக்கு அதிக ஆர்வம் இருப்பதாக கூறப்படுகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க அண்மையில் சீனா சென்ற புதின், அந்நாட்டு அதிபர் சீ சின்பிங்குடன் வயது மூப்பு தடுப்பு, இறவாநிலை குறித்து புதின் பேசியிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.
உயிர் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள் காரணமாக இளமையை மனிதன் தொடர்ந்து பெறமுடியும் என்றும், மரணத்தையே வெல்லும் சூழல் கூட உருவாகும் எனவும் புதின் பேசியிருந்தார்.
மேலும் படிக்க : கருவாய்ப் புற்றுநோய் இலவச தடுப்பூசி : பயிற்சியைத் தொடங்கிய அரசு
ரஷ்யா, சீனா தீவிர ஆராய்ச்சி :
ரஷ்யாவை போல சீனாவும் வயதாவதை தடுத்து வாழ்நாள் நீட்டிப்பது(Lifespan Extension on Human) தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வுகள் பயனளித்து நடைமுறைக்கு வந்தால், மனிதனின் ஆயுட் காலம் நீட்டிக்கப்படும். அதனால் ஏற்படும் பாதிப்புகள், சமூகத்தில் அதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பது பற்றிய ஆய்வுகளையும், ரஷ்யாவும், சீனாவும் மேற்கொண்டு வருகின்றன.
==============