Russia has announced that it is ready to immediately send 9.5 million barrels of oil to India. source:google
உலகம்

இந்தியாவிற்கு 95 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் : அனுப்ப காத்திருக்கும் ரஷ்யா!

95 லட்சம் பீப்பாய் எண்ணெய்யை உடனடியாக இந்தியாவுக்கு அனுப்ப தயாராக இருப்பதாக ரஷியா அறிவித்துள்ளது.

S Kavitha

Russia has announced that it is ready to immediately send 9.5 million barrels of oil to India:

உலக நாடுகளில் இருந்து இறக்குமதி

உலக நாடுகளிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய்யை தொடர்ந்து இறக்குமதி செய்து வருகிறது.

அந்த வகையில் இந்தியா மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யில் 40 சதவீதத்தை ஹோா்முஸ் நீரிணை வழியாகவே கொண்டு வருகிறது.

ஈரான், இஸ்ரேல்-அமெரிக்கா போர்

இந்த நிலையில், கடந்த ஆறு நாட்களாக ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈராணும் எதிர் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஹார்முஸ் நீரிணை மூடல்

அந்த வகையில் ஈரான், அமெரிக்கா - இஸ்ரேல் போர் எதிர்ரொலி காரணமாக ஈரான் ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது.

ஈரான் எச்சரிக்கை

மேலும் அந்த வழியாக கப்பல்களை அனுமதிக்க முடியாது என்றும், மீறினால் தாக்குதல் நடத்துவோம், கப்பல்கள் தீக்கிரையாக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

இதனால் போர் தொடங்கிய நாள் முதல் இதுவரையில் ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து தடைபட்டு உள்ளது.

இந்தியாவிடம் உள்ள கச்சா எண்ணெய் இருப்பு

இருப்பினும் இந்தியாவிடம் தற்போதைய நிலைமையை சமாளிப்பதற்கு ஏற்ற வகையில், அடுத்த 25 நாள்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது.

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

எனினும் ஈரான், இஸ்ரேல் , அமெரிக்க நிலைமை தொடர்ந்தால் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவைக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்படும் அபாயம் உள்ளது.

இந்தியாவிற்கு உதவ முன்வரும் ரஷ்யா

இந்த நிலையில், ஈரான், இஸ்ரேல், அமெரிக்க போர் சூழல் சரியாகும் வரை நெருக்கடியை சமாளிக்க இந்தியாவிற்கு ரஷ்யா உதவுவதாக தெரிவித்துள்ளது.

95 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்

அதன்படி 95 லட்சம் பீப்பாய்களுடன் இந்திய கடல் எல்லைக்கு அருகே நிற்கும் கப்பல்களை உடனடியாக திருப்பிவிட ரஷ்யா தயாராக இருப்பதாகவும், அப்படி திருப்பி விட்டால் அவை ஒரு வாரத்துக்குள் இந்தியாவுக்கு வந்து சேரும் என்றும் ரஷியா தெரிவித்துள்ளது.

இந்தியா- அமெரிக்கா ஒப்பந்தம்

இந்திய அமெரிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் நடப்பதற்கு முன்பே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அழுத்தத்தின் காரணமாக ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா சற்று குறைத்திருந்தது.

அதன்படி ரஷ்யாவிடம் இருந்து ஜனவரி மாதத்தில் 11 லட்சம் பீப்பாய் எண்ணெயை மட்டுமே இந்தியா இறக்குமதி செய்திருந்தது.

======