Russia Recognise Taliban Goverment https://x.com/MoFA_Afg
உலகம்

ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசுக்கு அங்கீகாரம் : முதல் நாடாக ரஷ்யா

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தலைமையிலான அரசை, ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து உள்ளது.

Kannan

உலகளவில் பயங்கரவாத செயல்களுக்கு ஊற்றுக் கண்ணாக ஆப்கானிஸ்தான் செயல்படுகிறது. பல்வேறு பயங்கரவாத குழுக்கள் இங்கிருந்து செயல்படுகின்றன.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி :

இங்கு, 2021ம் ஆண்டு முதல் தாலிபான்களின் ஆட்சி நடந்து வருகிறது. தாலிபான்களை அமெரிக்கா உள்பட பல நாடுகள் பயங்கரவாதிகளாக அங்கீகரித்துள்ளது. அதுமட்டுமின்றி தாலிபான்கள் உள்நாட்டு போரை தொடங்கி தான் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றினர். இதனால் இன்னும் ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசை அங்கீகரிக்க உலக நாடுகள் தயக்கம் காட்டி வருகின்றன.

தாலிபான் அரசுக்கு ரஷ்யா அங்கீகாரம் :

இந்நிலையில் தான் முதல் முதலாக ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசை ரஷ்யா அங்கீகரித்துள்ளது. ரஷ்யாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதரகராக தாலிபான் அரசால் குல் ஹசன் நியமிக்கப்பட்டார். அவரை ரஷ்யா ஏற்றுக்கொண்டுள்ளது.

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நடந்த நிகழ்ச்சியில் தாலிபான் தூதரை ரஷ்யா அங்கீகரித்தது. இந்த விழாவில் ரஷ்யாவின் வெளியுறவுத் துணை அமைச்சர் ஆண்ட்ரி ருடென்கோ, தாலிபான் தூதர் குல் ஹசனை சந்தித்து சான்றுகளை பெற்று கொண்டார்.

ஆதரவு ஏன்? ரஷ்யா விளக்கம் :

இது தொடர்பாக ரஷ்யா அளித்துள்ள விளக்கத்தில், ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதற்கான காரணம், ஒத்துழைப்பை மேம்படுத்தவே.

பல்வேறு துறைகள், உற்பத்தி ரீதியில் இந்த நட்பு அவசியமாகிறது. எங்களின் அங்கீகாரம் ஆப்கானிஸ்தான் அரசை மற்றவர்கள் அங்கீகரிக்க ஒரு வாய்ப்பாக அமையும்.

====