Six Planets Alignment 2026 Date and Time will align on 28th February 2026. Here's how to see the celestial event of 6 Planet Parade in Tamil google
உலகம்

Six Planet Alignment: வானில் காணும் அதிசயம்: மிஸ் பண்ணிடாம பாருங்க

Six Planets Alignment 2026 Date and Time : வானில் ஒரே நேரத்தில் 6 கோள்​கள் அணிவகுத்து சந்திக்கும் அரிய நிகழ்வை, பிப்.28-ம் தேதி பொது​மக்​கள் கண்டு மகிழலாம் என்று வானிலை அறிஞர்​கள் தெரிவித்துள்ளனர்.

Rohini

அரிதாக நிகழும் அபூர்வ நிகழ்வு

Six Planets Alignment 2026 Date and Time in Tamil : சூரியக் குடும்​பத்​தில் உள்ள ஒவ்​வொரு கோளும் சூரியனைச் சுற்றி வருவது தெரிந்த ஒன்றே .அதன்படி பூமி ஒரு ​முறை சூரியனை சுற்​றிவர 365 நாட்​களாகின்றன.

அந்த வகையில் கோள்​களின் சுற்​று​ வட்​டப் பாதை​யில் ஒன்​றை ஒன்று சந்​திக்​கும் அபூர்வ நிகழ்​வு​கள் அவ்​வப்​போது மட்டுமே நிகழும் .

கடந்த ஆண்டு ஏற்பட்ட நிகழ்வு

அதன்​படி, 6 கோள்​கள் ஒரே நேர்க்​கோட்​டில் அணிவகுத்து வரும் அரிய நிகழ்​வானது கடந்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி நடந்​தது.

இந்த ஆண்டு எப்போது நிகழும்

இந்த ஆண்டிற்கான இந்த நேர்க்கோட்டு சந்திப்பு நிகழ்வானது 2 ​முறை ஒரே நேர்க்​கோட்​டில் வரவுள்​ளன.

அதன்​படி, வெள்​ளி, வியாழன், சனி, செவ்​வாய், நெப்​டியூன் மற்​றும் யுரேனஸ் ஆகிய 6 கோள்​கள் ஒரே நேர்க்​கோட்​டில் பிப்.28ம் தேதி தென்பட உள்​ளன.

வெறும் கண்களால் காண முடியுமா

வெள்​ளி, வியாழன், சனி மற்​றும் செவ்​வாய் கோள்​களை பார்க்​கலாம் என்றும் ,நெப்​டியூன் மற்​றும் யுரேனஸை மிக​வும் சக்​தி​வாய்ந்த தொலைநோக்​கி​களால் மட்​டுமே காண முடி​யும்.

சிறப்பு ஏற்பாடு

அறி​வியல் அமைப்​பு​கள் சார்​பில் இந்நிகழ்வை காண நாடு முழு​வதும் சிறப்பு ஏற்​பாடு​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.

இதுகுறித்து வானிலை ஆய்​வாளர்​கள் கூறும்​போது, ‘‘கோள்​கள் ஒரே நேர்க்​கோட்​டில் வரவில்​லை. பூமி​யில் இருந்து பார்க்​கும் ​போது இந்​தக் கோள்​கள் ஒரே நேர்க்​கோட்​டில் இருப்​பது ​போல ஒரு மாயத் தோற்​றத்தை ஏற்​படுத்​துவதாக தெரிவித்தனர் .