Soyuz MS-29 successfully launched to transport Indian-origin astronaut Anil Menon, to International Space Station AI generated
உலகம்

”அனில் மேனன் வெற்றிப் பயணம்” : இந்திய வம்சாவளி விண்வெளி வீரர் : சீறிப்பாய்ந்த சோயூஸ் விண்கலம், 6 மாதங்கள் ஆராய்ச்சி..!

இந்திய வம்சாவளி வீரர் அனில் மேனன் உட்பட 3 பேரை சர்வதேச விண்வெளி மையத்திற்கு கொண்டு செல்லும் பணியை வெற்றிகரமாக தொடங்கியது சோயூஸ் எம்​எஸ்​-29 விண்கலம்.

Kannan

சர்வதேச விண்வெளி மையம்

அமெரிக்​கா, ரஷ்​யா, ஐரோப்​பிய ஒன்​றி​யம், ஜப்​பான், கனடா ஆகியவை இணைந்து, வான்வெளியில் சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்தை அமைத்​துள்​ளன.

இந்த விண்​வெளி நிலை​யத்​துக்கு அமெரிக்​கா​வின் ஸ்பேஸ் எக்ஸ் நிறு​வனத்​தின் டிராகன், ரஷ்​யா​வின் சோயூஸ் விண்​கலங்​கள் இயக்​கப்​பட்டு வரு​கின்​றன.

விண்வெளி மையத்தில் 7 வீரர்கள்

சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​தில் 7 விண்​வெளி வீரர்கள் தங்​கி​யிருந்து ஆய்வு செய்​கின்​றனர். பொது​வாக 6 மாதங்களுக்கு ஒரு​முறை அவர்​கள் மாற்​றப்​படு​வது வழக்​கம்.

மூன்று பேர் விண்வெளி பயணம்

அதன்​படி அமெரிக்​கா​வின் நாசா விண்​வெளி மையத்தை சேர்ந்த அனில் மேனன், ரஷ்ய விண்​வெளி வீரர்​கள் பியோட்​டர் துப்​ரோவ், அன்னா கிகினா ஆகியோர் நேற்று இரவு சோயூஸ் எம்​எஸ்​-29 விண்​கலம் மூலம் சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​துக்கு புறப்பட்டனர்.

சோயூஸ் எம்​எஸ்​-29 விண்​கலம்

கஜகஸ்​தான் நாட்டில் உள்ள பைக்​கானூரில் உள்ள ஏவுதளத்​தில் இருந்து இவர்​களின் விண்​கலம் நேற்று இரவு இந்திய நேரப்​படி இரவு 8.17 மணி) புறப்​பட்​டது. இந்​திய வம்​சாவளியை சேர்ந்த அனில் மேனனுக்கு இது முதல் விண்​வெளிப்பயண​மாகும். விண்​கலம் புறப்​படு​வதற்கு முன் அனில் மேனன் எக்ஸ் தளத்​தில் தனது மகிழ்ச்​சியை பகிர்ந்து கொண்​டார்.

அனில் மேனன் மகிழ்ச்சிப் பதிவு

“கஜகஸ்​தானில் இருந்து சோயூஸ் எம்​எஸ்​-29 விண்​கலம் மூலம் விண்​வெளிக்​குச் செல்​வ​தி​லும், நாசா மற்​றும் எக்​ஸ்​பெடிஷன் 74/75-க்கு ஆதர​வாக 8 மாத காலப் பணியை தொடங்​கு​வ​தி​லும் பெரு​மகிழ்ச்சி அடைகிறேன். நாசா, நண்பர்கள், குடும்​பத்​தினர் மற்​றும் அன்​பானவர்​களுக்கு எனது நன்​றி. நாளை விடியப்​போகும் நாளுக்​காக காத்​திருக்​கிறேன்​” என்று அனில் மேனன் தெரிவித்துள்ளார்.

மருத்துவ ஆய்வை மேற்கொள்ளும் மேனன்

48 வயதாகும் அனில் மேனன் சர்வதேச விண்வெளி மையத்தில் ஆறுமாத காலம் தங்கி இருப்பார். நீண்டகால விண்வெளி பயணத்தால் ஏற்படும் உடலியல் விளைவுகள் குறித்த ஆய்வை மேனன் மேற்கொள்ளவிருக்கிறார்.

நீண்ட துார விண்வெளி பயணங்களின் போது, பூமியின் உதவியின்றி விண்வெளி வீரர்களே, தங்களுக்கு தேவையான மருத்துவப் பரிசோதனைகள் செய்வதற்கான சாத்தியம் குறித்தும் அவர் ஆய்வு செய்ய உள்ளார்.

செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட மருத்துவ கருவிகளுக்கு தேவையான செமிகண்டக்டர்களை விண்வெளியில் புவிஈர்ப்பு இல்லாத சூழலில் உற்பத்தி செய்யும் ஆய்விலும் அவர் ஈடுபட உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

====================