Space-operated bullet trains: China surpasses nations worldwide in high-speed rail source: Ai generated
உலகம்

விண்வெளியில் இருந்து இயக்கப்படும் புல்லட் ரயில்கள் : அதிவேக ரயில்வே, உலக நாடுகளை முந்திய சீனா!

சீனாவின் விண்வெளி புல்லட் ரயில் தொழில்நுட்பம்: 50,000 கி.மீ பாதையுடன் புதிய உலக சாதனை!

Kavitha prasanna

Space-operated bullet trains: China surpasses nations worldwide in high-speed rail!

சீனா தொழில்நுட்பப் போட்டியில் உலக நாடுகளே வியக்கும் வண்ணம் வெகுதூரம் முன்னேறியுள்ளது.

பிரமிக்க வைக்கும் மைல்கல்

இந்தியாவின் ஒட்டுமொத்த ரயில்வே பாதையின் நீளமே சுமார் 70,000 கி.மீ தான். ஆனால், சீனா கடந்த 2008-ஆம் ஆண்டிற்குப் பிறகு, வெறும் 18 ஆண்டுகளில் சுமார் 50,000 கி.மீ தூரத்திற்கு புல்லட் ரயில் பாதைகளை அமைத்து உலக சாதனை படைத்துள்ளது.

இதனை வரும் 2030-க்குள் 60,000 கி.மீ ஆக அதிகரிக்கவும் அந்நாடு இலக்கு நிர்ணயித்துள்ளது.

'வென்சோ' விபத்தும் தொழில்நுட்ப மாற்றமும்

மணிக்கு 350 கி.மீ வேகத்தில் இயங்கும் ரயில்களில் சிறிய சிக்னல் கோளாறு ஏற்பட்டாலும் அது பெரும் பேரழிவை உண்டாக்கும். அப்படி ஒரு சம்பவம் கடந்த 2011-ல் சீனாவின் 'வென்சோ' பகுதியில் நிகழ்ந்தது.

ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள்

அங்கு ஏற்பட்ட கடுமையான மின்னல் தாக்கத்தால் தரையிலிருந்த சிக்னல் சிஸ்டம் முற்றிலும் பழுதடைந்தது.

சிக்னல் கோளாறை அறியாத கட்டுப்பாட்டு மையம், ஒரே தண்டவாளத்தில் வந்த இரண்டு ரயில்களையும் இயக்க அனுமதித்ததால், அவை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாயின. இக்கோர விபத்தில் 40 பேர் உயிரிழந்தனர், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

விண்வெளி தொழில்நுட்பம்

இந்த விபத்திற்குப் பிறகு, தரையில் இருக்கும் சிக்னல் அமைப்புகளை மட்டுமே நம்பியிருப்பதைத் தவிர்க்க சீன விஞ்ஞானிகள் முடிவெடுத்தனர். அதன் விளைவாக, புல்லட் ரயில்களை விண்வெளியில் இருந்து கட்டுப்படுத்தும் அதிநவீன தொழில்நுட்பத்தை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.

ரயிகளை கண்காணிக்கும் செயற்கைகோள்கள்

பூமியின் தாழ் வட்டப் பாதையில் வலம் வரும் நூற்றுக்கணக்கான சிறிய செயற்கைக்கோள்கள் இனி இந்த ரயில்களைக் கண்காணிக்கும் முதன்மை கண்களாகச் செயல்படவுள்ளன.

நமது கைப்பேசியில் கூகுள் மேப்ஸ் இயங்குவது போன்றே, ஒவ்வொரு ரயிலின் வேகம் மற்றும் இருப்பிடம் குறித்த தரவுகள் நொடிக்கு நொடி விண்வெளிக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து கட்டுப்பாட்டு மையத்திற்குப் பகிரப்படும்.

இது விண்வெளி சார்ந்த அமைப்பு என்பதால் மேகமூட்டம், வெள்ளம், நிலநடுக்கம், மின்னல் போன்ற எந்தவொரு இயற்கை சீற்றங்களாலும் சிக்னல் பாதிப்பு ஏற்படாது.

ஓட்டுநர் இல்லாத ரயில்கள்

இந்த செயற்கைக்கோள் வழி சிக்னல் சிஸ்டம் முழுமையாகச் பயன்பாட்டிற்கு வரும்போது, ரயில்களை இயக்க ஓட்டுநர்கள் தேவைப்பட மாட்டார்கள். தண்டவாள ஓரங்களில் சிக்னல் கம்பங்களோ, நிலையங்களில் கொடிகளோ இருக்காது.

இதன் மூலம் ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் சாத்தியக்கூறுகள் 0% ஆகக் குறைக்கப்படும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சீனாவின் புதிய தொழில்நுட்பம்

கடந்த 18 ஆண்டுகளில் 50,000 கி.மீ புல்லட் ரயில் பாதைகளை அமைத்துள்ள சீனா, செயற்கைக்கோள் மூலம் விண்வெளியில் இருந்து ரயில்களை இயக்கும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துகிறது.

=====