செயற்கை நுண்ணறிவின் அசுர வளர்ச்சி
எல்லா துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகமாகி கிட்டே வருது. அதிகப்படியான தகவல்களைச் சேமிக்கவும், விரைவாகச் செயலாக்கவும் பிரம்மாண்டமான டேட்டா சென்டர்களின் தேவையும் அதிகரிச்சு வருது.
விண்வெளியில் டேட்டா சென்டர்கள்
இதற்காக பூமியில் டேட்டா சென்டர்களை அமைப்பதற்குப் பதிலாக, விண்வெளியிலேயே அவற்றை உருவாக்கும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்கள் களம் இறங்கியுள்ளன.
விண்வெளியில் கிடைக்கும் தடையற்ற சூரிய சக்தியைப் பயன்படுத்தி, செயற்கைக்கோள்களிலேயே AI தரவுகளைச் செயலாக்கி பூமிக்கு அனுப்புவது இந்த திட்டத்தோட முக்கிய நோக்கம்.
‘ஸ்டார்மைண்ட்’ செயற்கைக்கோள் தொகுப்பு
அந்த வகையில எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளியில் தனது ‘ஸ்டார்மைண்ட்’ (Starmind) செயற்கைக்கோள் தொகுப்பை உருவாக்கத் திட்டமிட்டு இருக்கு.
10 லட்சம் செயற்கைகோள்கள்
இதற்காக 10 லட்சம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த அந்நிறுவனத்துக்கு அமெரிக்காவொட FCC, அதாவது அமெரிக்க ஃபெடரல் கம்யூனிகேஷன் கமிஷன் அனுமதி கொடுத்து இருக்கு.
போட்டி போடும் நிறுவனங்கள்
டேட்டா சென்டர் திட்டத்தில, ஸ்பேஸ் எக்ஸ் மட்டுமின்றி கூகுள், ப்ளூ ஆரிஜின் உள்ளிட்ட நிறுவனங்களும் போட்டி போடுகின்றன.
கூகுள் நிறுவனம் ‘சன் கேட்சர்’ (Suncatcher) என்ற ரகசியக் குறியீட்டுப் பெயரில் விண்வெளி டேட்டா சென்டர் தொடர்பான ஆய்வுகளை நடத்திக்கிட்டு வருது.
அதேபோல், ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆரிஜின் நிறுவனம் ‘ப்ராஜெக்ட் சன்ரைஸ்’ (Project Sunrise) என்ற பெயரில் விண்வெளி டேட்டா சென்டர்களை அமைக்க FCC-யிடம் விண்ணப்பிச்சு இருக்கு.
ஸ்டார்கிளவுட் (Starcloud) உள்ளிட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் இந்தத் துறையில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன.
ஸ்பேஸ்எக்ஸ் தனிச்சிறப்பு
ஆனா இவங்க யாருக்கும் இல்லாத பலம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு இருக்கு. அது என்னன்னா சொந்தமாக ராக்கெட்டுகளைத் தயாரித்து விண்ணில் செலுத்தும் வலிமை ஸ்பேக் எக்ஸ் கிட்ட இருக்கு.
2027ல் செயற்கைகோள்கள்
ஏற்கெனவே நூற்றுக்கணக்கான விண்வெளிப் பயணங்களை அந்நிறுவனம் வெற்றிகரமா செயல்படுத்தி இருக்கு. அதன்படி, 2027ம் ஆண்டு விண்வெளி டேட்டா சென்டர் திட்டத்துக்கான முதல் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தவும், 2028ல் திட்டத்தைப் பெரிய அளவில் விரிவுபடுத்தவும் எலான் மஸ்க் வியூகம் வகுத்து இருக்காராம்.
விண்வெளியில் இயங்குவதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட என்விடியா நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ‘வேரா ரூபின்’ (Vera Rubin) செயலிகளைப் பயன்படுத்தவும் ஸ்பேஸ் எக்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.
தாழ்வான புவி சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்கள்
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அனுப்புற செயற்கைகோள்கள் எப்படி செயல்படும் அப்படின்னு பார்க்கலாம். பூமிக்கு அருகே தாழ்வான புவி சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்படும். இவை ஒன்றுக்கொன்று நெருக்கமாக அமைக்கப்பட்டு, அவற்றுக்கு இடையே தடையற்ற தகவல் தொடர்பு வசதி ஏற்படுத்தப்படும்.
தகவல்கள் எளிதாக பூமிக்கு அனுப்பும்
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்மைண்ட் செயற்கைக்கோள்கள், ஏற்கெனவே விண்வெளியில் செயல்பட்டு வரும் அதன் ஸ்டார்லிங்க் இணையச் செயற்கைக்கோள்களுடன் தொடர்புகொள்ளும். பின்னர், ஸ்டார்லிங்க் நெட்வொர்க் மூலமாகத் தகவல்கள் எளிதாக பூமிக்கு அனுப்பப்படும்.
சரி விண்வெளியில் டேட்டா சென்டர்கள் சிறப்பா செயல்படுமா? அவற்றுக்கான சவால்கள் எப்படி இருக்கும் அப்படின்னு பார்க்கலாம்.
தொழில்நுட்ப சவால்கள்
விண்வெளியில் டேட்டா சென்டர்களை அமைப்பதில் பல்வேறு நன்மைகள் இருந்தாலும், தொழில்நுட்பச் சவால்களுக்கும் பஞ்சமே இருக்காது.
விண்வெளியிலும் பாதிப்பு இருக்கும்
குறிப்பா, விண்வெளியில் நிலவும் அதிகப்படியான கதிர்வீச்சிலிருந்து கணினிச் செயலிகளைப் பாதுகாப்பது அவ்வளவு சுலபமல்ல. வெப்பநிலை மாற்றங்கள், விண்வெளிக் குப்பைகள் மற்றும் மிகச்சிறிய விண்கற்கள் மோதுவதால் ஏற்படும் பாதிப்புகளையும் சமாளிக்க வேண்டி இருக்கும்.
தண்ணீர், மின்சாரம் தேவைப்படாது
அதேசமயம், பூமியைப்போல இரவு நேரம் அல்லது மேகமூட்டம் போன்ற தடைகள் விண்வெளியில் இல்லை. மேலும், பூமியில் சர்வர்களை குளிர்விக்க அதிக நீர் மற்றும் மின்சாரம் தேவைப்படும். அந்த சிக்கலும் அங்கு இருக்காது.
பூமிய பொருத்தவரை, ஏ.ஐ தொழில்நுட்பங்களை இயக்க வேண்டுமானால், ஆயிரக்கணக்கான சக்திவாய்ந்த கணினிகள் தேவை. இந்த கணினிகளை இயக்குவதற்கு, அதிக அளவிலான மின்சாரம் மற்றும் தண்ணீரும் அவசியம்.
டேட்டா சென்டர் - அமெரிக்கர்கள் எதிர்ப்பு
அதுமட்டுமல்லாம, ஏ.ஐ. டேட்டா சென்டர்களை அமைப்பதற்கு மிகப்பெரிய நிலப்பரப்பும் தேவைப்படுகிறது. ஆனால், இதற்கு அமெரிக்க மக்கள் பெரும் எதிர்ப்பை தெரிவிச்சு வர்றாங்க.
ஆனா, விண்வெளியில இந்த பிரச்சினையே இருக்காது. ஏன் செயற்கைகொள் தொகுப்புகளை நிறுத்தறீங்க, அப்படின்னு யாரும் கேள்வி கேட்க போறது கிடையாது.
விண்வெளியில் இருக்கும் சாதகங்கள்
விண்வெளியின் இயற்கையான குளிர்ச்சியான சூழல் டேட்டா சென்டர்கள் சிறப்பாக செயல்பட உதவியா இருக்கும். விண்வெளியில் உள்ள இந்த டேட்டா சென்டர்கள் பூமிக்கு தகவல்களை அனுப்ப ரேடியோ அலைகளுக்கு பதிலாக லேசர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும், இந்த தொழில்நுட்பம், பூமியில் உள்ள ஃபைபர் ஆப்டிக் கேபிள்களைவிட அதிவேகமான இணைய இணைப்பை வழங்கு வல்லமை கொண்டவை.
24 மணி நேரம் சூரிய ஆற்றல்
சூரிய ஆற்றலைத் தொடர்ந்து பயன்படுத்த முடியும். இதனால், எரிபொருள் தேவை என்பதே இருக்காது. சூரியனை நோக்கியே எப்போதும் அமைந்திருக்கும் சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் செயற்கைகோள்கள் நிலைநிறுத்தப்படும். இதனால், அவற்றுக்கு தொடர்ந்து சூரிய ஆற்றலானது தங்கு தடையில்லாம கிடைக்கும்.
களமிறங்கும் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்டுகள்
எலான் மஸ்க் ஏற்கனவே ‘Colossus’ என்ற உலகின் மிகப்பெரிய AI சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கி இருக்காரு. இதன் அடுத்த கட்டம் தான், விண்வெளி டேட்டா சென்டர். இந்த திட்டத்திற்கு, தனது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டுகள் அவர் பயன்படுத்தி கொள்வார். யாரையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியமும் இருக்காது.
ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான டேட்டா சென்டர் செயற்கை கோள்களை விண்வெளிக்கு கொண்டு செல்லவும், அவற்றை பராமரிக்கவும் இந்த ராக்கெட்கள் உதவியா இருக்கு. எனவே, விண்வெளிக்கு தேவையான உபகரணங்களை கொண்டு செல்வதிலும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு எந்த சிக்கலும் இருக்காது.
விஞ்ஞானிகள் முன்வைக்கும் சவால்கள்
இது பிரம்மாண்டமாக தெரிந்தாலும், விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் முக்கிய சவால்களை முன்வைக்கிறாங்க. விண்வெளி குளிர்ச்சியாக இருந்தாலும், வெற்றிடத்தில் கணினி சிப்கள் வெளியிடும் வெப்பத்தை வெளியேற்றுவது மிகவும் சிக்கலாக இருக்கும்.
இதனால் சிப்கள் உருகும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கிறாங்க. விண்வெளியில் உள்ள காஸ்மிக் கதிர்கள் நுட்பமான மின்னணு பாகங்களை மிக விரைவாக சிதைத்துவிடும்.
ஏற்கனவே பூமியின் சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள் கழிவுகள் அதிகரித்து வரும் நிலையில், 10 லட்சம் செயற்கை கோள்கள் என்பது விண்வெளி விபத்துகளுக்கு வழிவகுக்கும்.
ஒரு சிப் பழுதடைந்தால்கூட, அதை விண்வெளிக்கு சென்று மாற்றுவது என்பது மிகவும் செலவுமிக்க மற்றும் கடினமான காரியம் அப்படினும் எச்சரிக்கப்படுது.
8 மடங்கு அதிக திறனுடன் செயல்படும்
எது எப்படி இருந்தாலும், பூமியில் அமைக்கப்படும் டேட்டா சென்டர்களுடன் ஒப்பிடும்போது, இந்த முறையில் சுமார் 8 மடங்கு அதிக செயல்திறனுடன் சூரிய ஆற்றல் நேரடியா கிடைக்கும். இடப்பற்றாக்குறை இல்லாம, தண்ணீர், மின்சார செலவு இல்லாம விண்வெளியில் டேட்டா சென்டர்கள் செயல்படும்.
இதன் மூலம் எதிர்காலத்தில் விண்வெளியே மிகப்பெரிய டேட்டா சென்டராக மாறி, உலகிற்கு தகவல்களை வழங்கும் களஞ்சிமா செயல்படும். மனிதகுல நவீனத்தை அடுத்த கட்டத்தை நோக்கி இது நகர்த்தும் அப்படின்னு சொல்லப்படுது.
====