ஆர்டிக் பனிப்பிரதேசம்
ஆர்டிக் பூமியின் வடமுனையில் உள்ள மிக குளிர்ந்த பனி பிரதேசம் இங்கு ஆண்டு முழுவதும் உறை பனியும், பனி பாறைகளும் நிறைந்து காணப்படும்.
குளிர்காலத்தில் சுமார் மைனஸ் டிகிரிக்கும் கீழே கடும் குளிர் நிலவும். இதன் காரணமாக மனிதர்கள் வாழ தகுதியற்ற இடமாக ஆர்டிக் கருதப்படுகிறது. அனால், காலநிலை மாற்றம் ஆர்டிக் பகுதியையும் விட்டு வைக்காது போலத் தெரிகிறது.
அதிகரிக்கும் வெப்பம்
உலகின் பல்வேறு நாடுகளில் அளவுக்கு அதிகமான வெப்பம் பதிவாகி வருகிறது.
குறிப்பாக பிரான்ஸ் இத்தாலி ஸ்பெயின் உள்ளிட்ட குளிர் பிரதேசங்களிலும் கூட கடும் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் 10 ஆயிரத்தை தாண்டி நிற்கிறது.
காலநிலை மாற்றத்தால் பாதிப்பு
தற்பொழுது ஆர்டிக் பனி பிரதேசமும் கால நிலை மாற்றத்தின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. பொதுவாக பூமி மூன்று பக்கம் நிலங்களாலும் ஒரு பக்கம் கடல் ஆழம் சூழப்பட்டுள்ளது.
4 மடங்கு வெப்பம் அதிகரிப்பு
பூமியின் மற்ற இடங்களை விட முதல் 4 நான்கு மடங்கு வேகத்தில் வெப்பம் ஆர்டிக் பகுதியில் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
மிதக்கும் அறிவியல் ஆய்வகம்
இதற்கான காரணத்தை கண்டறிய ஐரோப்பிய நாடான பிரான்சில் இருந்து, தாரா போலலார் ஸ்டேஷன் என்று அதை நவீன மிதக்கும் அறிவியல் ஆய்வகம் ஆய்வு மேற்கொள்ள புறப்பட்டு சென்றுள்ளது.
இது 350 முதல் 500 நாட்கள் வரை வடதுருவ பகுதியில் மிதந்தபடியே ஆய்வு மேற்கொள்ள உள்ளது. பார்ப்பதற்கு பனி வீடு போலவும் பெரிய மிதவை கப்பலை போலவும் காட்சியளிக்கிறது.
தாரா போலார் ஸ்டேஷன்
இந்த ஆய்வு மையம் முழுக்க முழுக்க அலுமினியத்தால் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. ஆர்டிக் கடலில் உரை பணி தொடர்ந்து வேகமாக உருகும் அழுத்தம் மற்றும் மைனஸ் 50 ரெண்டு டிகிரி செல்சியஸ் வரையிலான கடும் குளிரை தாங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
6 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் ஆய்வு
இந்த ஆய்வகத்தின் அடிப்பகுதியில் ஒரு சிறப்பு செங்குத்து கிணறு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதை கொண்டு கடல் பணிக்கு அடியில் 6 ஆயிரம் மாடி ஆலம் வரை கருவிகளை அனுப்பி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆய்வு மாதிரிகளை ஆய்வாளர்கள் சேகரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆய்வகம் மேற்கொள்ளும் ஆய்வுகள் மூலம் ஆர்டிக் பிரதேசத்தில் வெப்பம் 4 மடங்கு அதிகரித்து இருப்பதற்கான காரணம் தெரிய வரும்.
நாயுடன் பயணிக்கும் தாரா குழு
12 பேர் அடங்கிய குழுவிற்கு கடுமையான பனியை தாங்கும் வகையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
நெருங்கி வரும் துருவ கரடி உள்ளிட்ட விலங்குகளைக் கண்டறிவதற்காக, ஒரு லப்போனிய மேய்ப்பு நாயும் இந்தப் பயணத்தில் அவர்களுடன் செல்கிறது.
குழுவில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பிற்காக துப்பாக்கியும் வழங்கப்பட்டுள்ளது.
=================