Tensions increased USA blocked Strait of Hormuz and Trump has ordered the destruction of ships passing through it google
உலகம்

ஹோர்முஸ் நீரிணையை முடக்கிய அமெரிக்கா : அத்துமீறும் கப்பல்களை தகர்க்க டிரம்ப் உத்தரவு : வளைகுடாவில் பதற்றம்!

ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா முடக்கி இருக்கும் நிலையில், அந்த வழியாக வரும் கப்பல்களை தகர்க்க டிரம்ப் உத்தரவிட்டு இருப்பதால், பதற்றம் அதிகரித்துள்ளது.

Kannan

ஈரான் போர்

ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தொடுத்த போர், 45 நாளை எட்டி விட்டது. ஒரு வாரத்தில் ஈரானை ஒடுக்கி விடலாம் என்ற இரண்டு நாடுகளின் கனவும் தவிடு பொடியானது.

வளைகுடாவில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள், தூதரகங்கள் மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது.

தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை

ஈரான் மீதான தாக்குதலை 10 நாட்கள் நிறுத்துவதாக அறிவித்த டிரம்ப், பாகிஸ்தானில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா பங்கேற்கும் என தெரிவித்தார்.

அதன்படி இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை 21 மணி நேரம் நீடித்த போதும், இறுதியில் தோல்வியில் முடிந்தது.

ஹோர்முஸ் நீரிணை முற்றுகை

ஈரான் நிபந்தனைகளை ஏற்க அமெரிக்காவும், அமெரிக்காவின் யோசனைகளை ஏற்க ஈரானும் மறுத்து விட்டதே இதற்கு காரணம்.

இதனால், ஆத்திரமடைந்த டிரம்ப், ஈரான் கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்முஸ் நீரிணை மூடப்படும், அந்த வழியாக எந்த கப்பல்களுக்கும் அனுமதியில்லை என்று கூறி, அமெரிக்க கடற்படையை அங்கு நிறுத்தி இருக்கிறார்.

எரிபொருள் சப்ளை ஸ்தம்பிப்பு

இதனால், நேற்று முதல் ஹோர்முஸ் நீரிணை முற்றுகையிடப்பட்டு இருக்கிறது. இதனால், ஈரானில் இருந்து எரிபொருள் கொண்டு செல்லப்படுவது முற்றிலுமாக ஸ்தம்பித்துள்ளது.

அத்துமீறி எந்த கப்பல் வந்தாலும், தகர்க்குமாறு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டு இருப்பதால், வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

அமெரிக்க விமான தாங்கி கப்பல்கள்

ஹோர்முஸ் நீரிணையை சுற்றியுள்ள பகுதிகளில் விமானந்தாங்கி கப்பல் உட்பட 15க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்களை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

அமெரிக்க போர்கப்பல்களுக்கு அருகில் வரும் ஈரானியப் போர்க்கப்பல்கள் அழிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

நீரிணையில் தடுப்புவேலி

போர்க்கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்களைக் கொண்டு தடுப்பு வேலி அமைத்துள்ளது அமெரிக்க ராணுவம். இவையன்றி விமானங்கள், டிரோன்கள் மூலமாகவும் தீவிர கண்காணிப்பு தொடர்ந்து வருகிறது.

வளைகுடாவில் பதற்றம்

ஈரானில் இருந்து கப்பல்கள் மட்டுமே தடுக்கப்படும். மற்ற நாடுகளில் இருந்து கப்பல்களுக்கு தடை இல்லை என்று அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.

இதனால், வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரான் கப்பல்கள் தகர்க்கப்பட்டால், அது மீண்டும் சண்டைக்கு வழி வகுக்கும் என்று தெரிகிறது.

==================