America's "Patriot Passport"-A New Announcement That Has Sent Shockwaves Across the World! source: Ai Generated
உலகம்

Patriot Passport: பாஸ்போர்ட்டில் டிரம்ப் படம்! அமெரிக்காவின் "பேட்ரியாட் பாஸ்போர்ட்" : உலகையே அதிரவைத்த புதிய அறிவிப்பு!

அமெரிக்க பாஸ்போர்ட்டில் டிரம்ப் படம்! பேட்ரியாட் பாஸ்போர்ட் வெளியீடு - சர்ச்சை பின்னணி.

Kavitha prasanna

Trump's Image on the Passport! America's "Patriot Passport"-A New Announcement That Has Sent Shockwaves Across the World!

அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத மாற்றமாக, டொனால்ட் டிரம்பின் உருவம் பொறிக்கப்பட்ட புதிய வகை பாஸ்போர்ட்டுகளை வெளியிட அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

பேட்ரியாட் பாஸ்போர்ட் சர்ச்சை

"பேட்ரியாட் பாஸ்போர்ட்" என அழைக்கப்படும் இந்த முயற்சி, தற்போது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

250-வது சுதந்திர தினப்பரிசு?

அமெரிக்காவின் 250-வது சுதந்திர தின ஆண்டு விழா வரும் ஜூலை மாதம் கொண்டாடப்பட உள்ளது.

லிமிடேட் வெர்ஷனாக பேட்ரியாட் பாஸ்போர்ட்

இந்த வரலாற்று மைல்கல்லைக் குறிக்கும் வகையில், ஒரு வரையறுக்கப்பட்ட பதிப்பாக அதாவது லிமிடேட் வெர்ஷனாக இந்த பாஸ்போர்ட்டுகள் வெளியிடப்பட உள்ளன.

வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தகவல்

இது குறித்துப் பேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி பிகாட், "குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இந்த நினைவுப் பதிப்பு பாஸ்போர்ட்டுகள் விரைவில் வெளியாகும்" என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

தனித்துவமும் சர்ச்சையும்

அமெரிக்க பாஸ்போர்ட்டுகளில் பொதுவாக தேசியச் சின்னங்கள், வரலாற்று இடங்கள் மட்டுமே இடம்பெறும். ஆனால், இந்தமுறை முதல்முறையாக பதவியில் இருக்கும் ஒரு அதிபரின் உருவப்படம் இதில் இடம்பெறுகிறது.

ஆதரவும் எதிர்ப்பும்

இது ஒரு வரலாற்றுத் தருணத்தின் தலைமையைப் பிரதிபலிக்கிறது என ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஆனால் மறுபக்கம் அரசு ஆவணத்தைத் தனிப்பட்ட விளம்பரத்திற்காகப் பயன்படுத்துவதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நாணயங்களிலும் டிரம்ப் மயம்?

பாஸ்போர்ட் மட்டுமன்றி, அமெரிக்க நாணயங்களில் டிரம்பின் கையொப்பத்தைச் சேர்ப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

கூட்டாட்சி ஆணையம் ஒப்புதல்

மேலும், அவரது உருவம் பொறித்த தங்கத்தாலான நினைவு நாணயத்திற்கும் கூட்டாட்சி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

மேலும் இந்த "பேட்ரியாட் பாஸ்போர்ட்" ஒரு நினைவுப் பதிப்பு மட்டுமே என்றும், இது வழக்கமான பயண ஆவணங்களுக்கு மாற்றானது அல்ல என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

ஆனாலும், ஒரு அரசு ஆவணத்தில் அரசியல் தலைவரின் படம் இடம்பெறுவது அமெரிக்க அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

=====