Two artificially formed lakes in Nepal contain 5 million cubic meters of water, posing a grave risk AI generated
உலகம்

”செயற்கை ஏரிகளில் 50 லட்சம் கனமீட்டர் தண்ணீர்” : நேபாளத்தில் அடுத்த பேராபத்து, பீகாரிலும் உச்சக்கட்ட எச்சரிக்கை...!

நேபாளத்தில் செயற்கையாக உருவாகி இருக்கும் இரண்டு ஏரிகளில் 50 லட்சம் கனமீட்டர் நீர் இருப்பதால், எந்த நிமிடமும் அது உடைந்து வெளியேறும் பேராபத்து காத்து இருக்கிறது.

Kannan

இமயமலையில் பனிப்பாறைகள் உடைந்தன

நேபாள - திபெத் எல்லையில் சீன பகுதியில் அமைந்துள்ள இமயமலை பகுதியில் கடந்த 26ம் தேதி, பனிப்பாறையில் திடீரென பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டது.

இந்த பனிப்பாறை உடைப்பால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பாறைகள், மண் ஆகியவை ஆற்றின் பாதையை தடுத்ததால் அங்கு நீர் பெருமளவில் சேர்ந்துள்ளது.

ஆக்ரோஷத்தோடு பாய்ந்த நீர்

இப்படி சேர்ந்த நீர் ஒரு கட்டத்தில் தடுப்பை உடைத்துக்கொண்டு பெரும் ஆக்ரோஷத்தோடு அங்கிருந்த போதேகோஷி (Bhote Koshi) ஆற்றில் சேர்ந்து மலை சரிவுகளை நோக்கி இறங்கியது.

சுனாமியாய் தண்ணீர் - 600க்கும் மேற்பட்டோர் பலி

சில வினாடிகளில் 9 மீட்டர் வரை ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து, சுனாமி வேகத்தில் வந்த வெள்ளம் நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்தியது. இந்த பேரழிவில் இதுவரை 600க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

செயற்கை ஏரிகள் - காத்திருக்கும் ஆபத்து

இந்த நிலையில், இமயமலை பகுதிகளில் இதே போன்று மற்றொரு இடத்திலும் பெருவெள்ளம் எப்போது வேண்டுமானாலும் ஏற்பட வாய்ப்புள்ளதாக நேபாள பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீன மற்றும் நேபாள எல்லைப் பகுதியில் உள்ள இமயமலை பகுதியில் நிலசரிவு காரணமாக இரண்டு பெரிய செயற்கை ஏரிகள் உருவாகியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

50 லட்சம் கனமீட்டர் நீர்

இந்த இரு ஏரிகளிலும் சுமார் 50 லட்சம் கனமீட்டர் நீர் தேங்கி உள்ளது என்றும், இந்த ஏரிகளின் அணைக்கட்டுகள் பனிப்பாறைகளாய் உள்ளன. இவை கரையும் போது மீண்டும் ஒரு கடுமையான பெருவெள்ளம் உருவாகும் . இதன் மூலம் காட்டாறாய் பாயும் வெள்ளம் பேரழிவை ஏற்படுத்தும்.

வெள்ள அபாய எச்சரிக்கை

வெள்ள நீரும் போதே கோஷி ஆறு வழியாகவே வெளியாகும் என்பதால் அந்த பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அவசர கால எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கரையோரம் இருப்பவர்கள் வெளியேறவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியாவிற்குள் நுழையும் சுனாமி வெள்ளம்

கோஷி ஆற்றின் வழியே பாயும் இந்த பெருவெள்ளம், கீழ்நோக்கிச் சென்று சுன்கோஷி (Sunkoshi) மற்றும் நாராயணி (Narayani) ஆறுகளுடன் இணையும். இறுதியில் இந்த நீர் இந்திய எல்லைக்குள் நுழையும் போது 'கண்டக்' (Gandak) ஆற்றாக மாறிப் பீகாரைத் தாக்கும் என்பதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

====================