UAE Breaks Tradition: No More Homework! Major Reform in School Education System Announced by Government Ai Generated
உலகம்

UAE Breaks: இனி வீட்டுப்பாடம் இல்லை" பள்ளிக்கல்வி முறையில் மாற்றம்.. யுஏஇ அரசு அதிரடி!

KG முதல் 2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் ரத்து; திறன் அடிப்படையிலான கற்றலுக்கு முன்னுரிமை வழங்கும் புதிய கல்விக் கொள்கையை அறிவித்தது யுஏஇ அரசு...

NARENDRAN K

திறன் அடிப்படையிலான கற்றலுக்கு முன்னுரிமை :

மனப்பாட கல்வி முறையிலிருந்து விலகி, மாணவர்களின் சிந்தனைத் திறன், படைப்பாற்றல், பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் மற்றும் தொடர்புத் திறனை மேம்படுத்தும் வகையில் புதிய கல்வி முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாணவர்கள் கற்றலை சுமையாக அல்லாமல் அனுபவமாக உணர முடியும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதிப்பீட்டு முறையிலும் மாற்றம் :

இதனை தொடர்ந்து மதிப்பிடும் முறையிலும் அந்த அரசாங்கம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது ,வீட்டுப்பாடம் ரத்து செய்யப்பட்டதோடு, மாணவர்களின் கல்வி மதிப்பீட்டு முறையிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

பள்ளி மதிப்பீடுகள் மற்றும் மத்தியகப்படுத்தப்பட்ட தேர்வுகள் இணைந்து மாணவர்களின் திறனை கணக்கிடும் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது.

வரும் கல்வி ஆண்டுகளில் இந்த நடைமுறை அமலுக்குவரும் என தகவல் :

2026-27 கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் இந்தத் திட்டம், சிறுவர்களின் மன அழுத்தத்தை குறைத்து, கற்றலை மேலும் சுவாரஸ்யமாகவும் பயனுள்ளதாகவும் மாற்றும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பள்ளி நேரத்திலேயே பாடங்களை முழுமையாக கற்றுக்கொள்ளும் சூழலை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.

மன அழுத்தத்தை குறைப்பதே முதல் இலக்கு :

சிறு வயதிலேயே அதிகப்படியான பாடச்சுமை மற்றும் வீட்டுப்பாடம் காரணமாக மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகும் சூழல் உருவாகி வருகிறது.

பள்ளி முடிந்த பிறகும் பாடப் பணிகளில் ஈடுபட வேண்டிய நிலை, குழந்தைகளின் ஓய்வு நேரத்தை குறைக்கிறது. இதைத் தவிர்க்கவே வீட்டுப்பாடத்தை நீக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மழலையர் முதல் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் வரை:

மழலையர் வகுப்புகள் (LKG, UKG) முதல் 2-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்க வேண்டாம் என்று யுஏஇ அரசு அறிவித்திருப்பது கல்வித்துறையில் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.

புதிய கல்விக் கொள்கையின்படி, LKG முதல் 2-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வீட்டுப்பாடத்தில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது

இந்த முடிவின் பின்னணியில் சிறுவர்களின் மனநலம், கற்றல் திறன் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கம் இருப்பதாக கல்வி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.