United States has proposed imposing new tariffs on goods imported from 16 countries, including India source:thamizhalai,ai generated
உலகம்

”இந்தியா மீது 25% வரி” : 16 நாடுகள் மீது வரி விதிக்கும் அமெரிக்கா : டிரம்பின் திட்டம் செயல்பாட்டிற்கு வருமா?..!

இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய வரி விதிக்க அமெரிக்கா முன்மொழிந்துள்ளது.

Kannan

அமெரிக்கா புதிய வரி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு, இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய வரி விதிக்க முன்மொழிந்துள்ளது.

இதில் இந்தியாவுக்கு 25% வரி விதிக்கப்படலாம் என்றும், இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானால் அது 17% ஆகக் குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்தப் புதிய வரி முன்மொழிவு, சர்வதேச வர்த்தகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவுக்கு ஒரு சதவீதம் முதல் மூன்று சதவீதம் வரை சாதகமான வரி விகிதம் கிடைக்க வாய்ப்புள்ளது.

இந்தியாவுக்கு 25% வரியா?

அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் (USTR), உற்பத்தித் துறைகளில் தேவைக்கு அதிகமான உற்பத்தித் திறன் மற்றும் உற்பத்தி இருப்பதாகக் கூறப்படும் புகார்களின் அடிப்படையில், பல்வேறு பொருளாதார நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் மீது விசாரணை நடத்தியது.

இதன் தொடர்ச்சியாக, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

ஒப்பந்தம் இறுதியானால் 17% ஆக குறையும்

அதேநேரத்தில், இந்தியா - அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால், இந்த வரி 17% ஆகக் குறைக்கப்படும் என்ற சலுகையும் முன்மொழிவில் இடம்பெற்றுள்ளது.

அதாவது, வர்த்தக ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் இந்தியப் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படலாம். ஒப்பந்தம் கையெழுத்தானால் 17% வரி என்ற நிலை உருவாகலாம்.

மற்ற நாடுகளுக்கான வரி

இந்தியாவுடன் ஒப்பிடும்போது, ஆசியாவின் போட்டி நாடுகளுக்கு முன்மொழியப்பட்டுள்ள வரி விகிதங்கள் சற்று அதிகமாக உள்ளன. வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால் வரி விதிப்பு விவரங்கள் :

* இந்தியா - 17%

• வங்கதேசம் - 18%

• கம்போடியா - 18%

• இந்தோனேசியா - 18%

• மலேசியா - 18%

• தாய்லாந்து - 18%

• வியட்நாம் - 20%

• சீனா - 20%

வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளைவிட இந்தியாவுக்கு ஒரு சதவீதம் குறைவான வரியும், வியட்நாம் மற்றும் சீனாவைவிட மூன்று சதவீதம் குறைவான வரியும் முன்மொழியப்பட்டுள்ளது.

இந்தியாவின் போட்டி நாடுகளுடன் ஒப்பிடும்போது, ஏற்றுமதித் துறையில் இந்தியாவுக்கு இது ஓரளவு சாதகமான நிலையை உருவாக்கும் அப்படின்னு சொல்லப்படுது.

=================