நிலநடுக்கம் காரணம் அல்ல :
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்திற்கு நிலநடுக்கம் காரணமில்லை என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.
நேபாளத்தில் திபெத்தையொட்டி இருக்கும் ரசுவா மாவட்டத்தில் போடே கோஷி ஆற்றில் நேற்று (புதன்கிழமை) காலை 9 மணியளவில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதில் கோஷி ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த பாலங்கள், ஆற்றங்கரையோரம் இருந்த கட்டடங்கள், நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டன.
300 இந்தியர்கள் பாதிப்பு என தகவல் :
நேபாளத்தில் திடீா் வெள்ளப் பெருக்கில் சிக்கி 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 300 இந்தியா்கள் உள்பட 570க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை.
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு நிலநடுக்கம் தான் காரணம் என்றும் அது ரிக்டர் அளவுகோலில் 4.4 எனப் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் முன்னதாக கூறியிருந்தது.
நிலநடுக்கம் ஒரு காரணமல்ல :
இந்த நிலையில் நேபாளத்தில் ஏற்பட்ட பேரிடருக்கு நிலநடுக்கம் காரணமில்லை என இன்று தெரிவித்துள்ளது.
"நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு நிலநடுக்கம் காரணம் அல்ல, பனிப்பாறை உடைந்து சரிவு ஏற்பட்டதால்தான் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
ஆனால் பனிப்பாறை ஏன் உடைந்தது என்பதற்கு காரணம் தெரியவில்லை.
அந்த பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட அதிர்வு 5.2 ரிக்டர் என்ற அளவில் பதிவாகியுள்ளது. நில அதிர்வு தரவுகள், அதிர்வு அலைகள், செயற்கைக் கோள் படங்கள் ஆகியவற்றின் மூலமாக இது கண்டறியப்பட்டுள்ளது." என்று விளக்கம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் இல்லை என USGS உறுதி :
ஆரம்பத்தில் பதிவான அதிர்வு நிலநடுக்கம் என கருதப்பட்டாலும், பின்னர் செயற்கைக்கோள் படங்கள் மற்றும் நில அதிர்வு மையங்களின் தரவுகளை ஆய்வு செய்த USGS, அது பனிப்பாறை மற்றும் பாறை சரிவால் உருவான அதிர்வாகும் என்று தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் எதுவும் ஏற்படவில்லை" என்றும் அந்த அமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது.