US President Donald Trump Launches US Military strikes on ISIS Terrorists in Nigeria World News in Tamil Truth Social
உலகம்

ISIS பயங்கரவாதிகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் : டிரம்ப்!

Donald Trump Strikes on ISIS Terrorists: நைஜீரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது அமெரிக்க ராணுவம் நேற்று இரவு சக்தி வாய்ந்த தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Baala Murugan

பேசுபொருளாகும் அதிபர் டொனால்டு டிரம்ப்

Donald Trump's US Military Strikes on ISIS Terrorists : ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் தொடர்ந்து அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தி வருவதாக அமெரிக்க தலைவர்கள் பலரும் குற்றம் சாட்டி வந்த நிலையில், சமீபத்தில் அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு அருகில் நடந்த துப்பாகி சூட்டில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவரும் உயிரிழந்தார்.

பல்வேறு நாடுகளுக்கு தடை

இதனால், அமெரிக்க பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்த நிலையில், அதிபர் டொனால்டு டிரம்ப் குறிப்பிட்ட நாடுகளுக்கு அமெரிக்க வருகைக்கு தடை விதித்தார்.

அமெரிக்க குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு புதிய நடைமுறைகளை பிறப்பித்து வருதாக தெரிவித்தார். இந்நிலையில், அதிபர் டோனால்டு டிரம்ப் நோபல் பரிசு முதல், வரி விதிப்பு வரை என அவரின் பெயர் உலகளவில் ஒரு பேசுபொருளாகவே இருந்து வருகிறது. இந்த சூழலில் தற்போது பதிவு ஒன்றை வெளியிட்டடுள்ளார்.

டிரம்ப் எக்ஸ் பதிவு

அமெரிக்க ராணுவம் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது கடுமையான தாக்குத்தல் நடத்தியுள்ளதாக டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வடமேற்கு நைஜீரியாவில் அப்பாவி கிறிஸ்தவர்களை குறிவைத்து கொடூரமாக கொலை செய்து வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது அமெரிக்க ராணுவம் எனது உத்தரவின்பேரில் சக்திவாய்ந்த, கொடிய தாக்குதலை நடத்தியுள்ளது.

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எச்சரிக்கை

கிறிஸ்தவர்களை கொலை செய்வதை நிறுத்தாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என ஏற்கனவே பயங்கரவாதிகளுக்கு நான் எச்சரிக்கை விடுத்திருந்தேன்.

இந்த நிலையில், அமெரிக்க ராணுவம் தனது அபாரமான திறமையால் பயங்கரவாதிகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தியுள்ளது. எனது தலைமையின் கீழ் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதத்தை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்று பதிவிட்டுள்ளார்.

தாக்குதல்களை நிறுத்தா விட்டால்...

மேலும், அமெரிக்க ராணுவத்தை கடவுள் ஆசீர்வதிக்கட்டும். உயிரிழந்த பயங்கரவாதிகள் உள்பட, அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தாவிட்டால், பயங்கரவாதிகளின் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும், என்று அவர் பதிவிட்டுள்ளார். அதிபர் டொனால்டு டிரம்பின் இந்த பதிவிற்கு உலக தலைவர்கள் முதல் சமூக ஆர்வலர்கள் வரை தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.