நியூயார்க் மேயர் தேர்தல்
US President Donald Trump on New York Mayor Election : அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மேயர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சியின் சார்பில் உகாண்டாவில் பிறந்து நியூயார்க்கில் வளர்ந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானியும், குடியரசுக் கட்சியின் சார்பில் கர்டிஸ் ஸ்லிவாவும் போட்டியிட்டனர். இதில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மிரட்டல் மற்றும் தொடர் எதிர்ப்புகளை எதிர்த்தும் ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றுள்ளார.
டிரம்ப் விரக்தி
அமெரிக்காவின் மியாமியில் நடந்த கூட்டத்தில் அதிபர் டிரம்ப் மம்தானியின் வெற்றி குறித்து விரக்தி தெரிவித்தார். அதில், அமெரிக்க மக்கள் ஒரு வருடத்திற்கு முன்பு என்னை தேர்ந்தெடுத்ததன் மூலம் இறையாண்மையை மீட்டெடுத்தனர். தற்போது நியூயார்க்கில் நாங்கள் சிறிது இறையாண்மையை இழந்தோம். கம்யூனிசத்திற்கும், பொது அறிவுக்கும் இடையிலான ஒரு தேர்வை எதிர்கொள்கிறது என்று தெரிவித்தார்.
அதிக சம்பளத்தை விரும்புகிறோம்
மேலும், நாங்கள் அதையும் எதிர்கொள்வோம். தனது நிர்வாகம் ஒரு பொருளாதார அதிசயத்தை நிகழ்த்தி வரும் அதே வேளையில், தனது எதிர்ப்பாளர்கள் சட்டவிரோத வெளிநாட்டினருக்கும் அதிக செலவினங்களை விரும்புகிறார்கள் என்று கூறினார். நாங்கள் அமெரிக்க தொழிலாளர்கள் மற்றும் அமெரிக்க குடும்பங்களுக்கு அதிக சம்பளத்தை விரும்புகிறோம்.
கம்யூனிஸ்ட் எப்படிச் செய்கிறார் பார்ப்போம்
கம்யூனிஸ்டுகள், மார்க்சிஸ்டுகள், சோசலிஸ்டுகள் மற்றும் உலகமயமாக்கல்வாதிகள் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் பேரழிவைத் தவிர வேறு எதையும் வழங்கவில்லை. இப்போது நியூயார்க்கில் ஒரு கம்யூனிஸ்ட் எப்படிச் செய்கிறார் என்பதைப் பார்ப்போம் என்று வெற்றிக்கு எதிரான தனது விரக்தியை வெளியிட்டு பேசியுள்ளார்.