US President Donald Trump Posts AI Video Of Barack Obama Arrested in White House 
உலகம்

AI Video : ஓபாமா கைதாவது போல் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்ட ஏஐ வீடியோ

Donald Trump AI Video on Barack Obama Arrest : முன்னாள் அதிபர் ஓபாமா கைதாவது போன்ற ஏஐ வீடியோவை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பகிர்ந்தது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

MTM

Donald Trump AI Video on Barack Obama Arrest : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது Truth Social தளத்தில் முன்னாள் அதிபர் பராக் ஓபாமா FBI முகவர்களால் ஓவல் அலுவலகத்தில் கைது செய்யப்படுவது போல் ஒரு ஏஐ-உருவாக்கப்பட்ட (AI-generated) வீடியோவைப் பகிர்ந்தார்.

இந்த வீடியோ டிக்டாக்கில் ஒரு பயனரால் உருவாக்கப்பட்டு, பின்னர் டிரம்பால் மறுபகிர்வு செய்யப்பட்டது. இதில் ஓபாமா "அதிபர் கூட சட்டத்திற்கு மேல் இல்லை"(No One Above The Law) என்று கூறுவதாகவும், பின்னர் "எவரும் சட்டத்திற்கு மேல் இல்லை" என்று பல ஜனநாயகக் கட்சி தலைவர்கள் கூறுவதாகவும் காட்டப்படுகிறது. அதைத் தொடர்ந்து, ஓபாமா கைது செய்யப்பட்டு, சிறைச்சாலை உடையில் கம்பிகளுக்குப் பின்னால் இருப்பது போல் ஒரு கற்பனைக் காட்சி காட்டப்படுகிறது, இதனுடன் பாடல் ஒலிக்கிறது.

இந்த வீடியோவில் எந்தவொரு மறுப்பு(Disclaimer) இல்லை என்பதால், இது முற்றிலும் கற்பனையானது என்று குறிப்பிடப்படவில்லை, இதனால் பலர் இதை "பொறுப்பற்ற செயல்" என்று விமர்சித்தனர்.

இதை ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கு தொடர்பான கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. இந்த வீடியோ, டிரம்ப் மற்றும் தேசிய புலனாய்வு இயக்குநர் துல்சி கப்பார்டு ஆகியோரின் 2016 தேர்தல் மோசடி குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டது. கப்பார்டு, ஓபாமாவின் நிர்வாகம் 2016 தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்து புனையப்பட்ட தகவல்களை உருவாக்கியதாக குற்றம்சாட்டி, 114 பக்க அறிக்கையை வெளியிட்டார், மேலும் இது தொடர்பாக நீதித்துறையில் விசாரணைக்கு பரிந்துரைத்தும் நினைவுகூறத்தக்கது.

இந்த வீடியோவுக்கு சமூக ஊடகங்களில் கலவையான எதிர்வினைகள் கிடைத்தன. சிலர் இதை ஆதரித்தாலும், பலர் இது தவறான தகவலைப் பரப்புவதாகவும், அரசியல் பதற்றத்தை அதிகரிப்பதாகவும் கண்டித்தனர். இது ஏஐ தொழில்நுட்பத்தின்(AI Technology) தவறான பயன்பாடு குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.