US President Donald Trump vs New York Mayor Zohran Mamdani Clash has Come to End in White House Meeting News in Tamil Google
உலகம்

முடிவுக்கு வந்தது மம்தானி-டிரம்ப் மோதல் : என்னதான் பேசினார்கள்?

Donald Trump vs Zohran Mamdani Clash : நியூயார்க் நகர மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோஹ்ரான் மம்தானியுடன் மிகவும் பயனுள்ள சந்திப்பு நடந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Baala Murugan

இந்திய வம்சாவளி மம்தானி வெற்றி

Donald Trump vs Zohran Mamdani Clash : அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு அண்மையில் நடந்த மேயர் தேர்தலில், 34 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி, ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

நியூயார்க் நகரத்தின் அரசியல் வரலாற்றிலேயே முதல் இந்திய-அமெரிக்க முஸ்லிம் மேயர் என்ற வரலாற்றுச் சாதனையைப் பெற்றார்.

மம்தானி டிரம்ப் மோதல்

தேர்தலின் போது, அதிபர் டிரம்பின் கொள்கைகளையும், டிரம்பையும் ஜோஹ்ரான் மம்தானி கடுமையாக விமர்சித்து இருந்தார். அதே போல் மம்தானியை டிரம்பும் கடுமையாக விமர்சித்து வந்தார். இருவரும் இடையும் கடும் அரசியல் வாக்குவாதல் தொடர்ந்து வந்தது.

மாம்தானியை வறுத்த டிரம்ப்

குறிப்பாக மம்தானியை கம்யூனிஸ்டு என்று விமர்சித்து வந்த டிரம்ப், அவர் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றால் நியூயார்க் நகரம் மோசமாகிவிடும் என்று கூறியிருந்தார். மேலும், அவர் வெற்றி பெற்ற பிறகு நம் அமெரிக்க ஜனநாயகம் அவரின் வெற்றியால் ஒரு பகுதியை இழந்துள்ளது எனவும், அவர் மேயராக தேர்வாகியிருக்கும் பகுதிக்கு எந்த உதவியும் இல்லாதவாறு நடந்து கொள்வேன் என்றும் தெரிவித்தார்.

முடிவுக்கு வந்த மோதல் - டிரம்ப் பெருமிதம்

இந்நிலையில் மம்தானி, அமெரிக்க அதிபர் டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார். இருவரும் பல மாதங்களாக ஒருவருக்கொருவர் எதிராக கடுமையாக விமர்சித்து வந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளதாக தெரியவருகிறது.

அதாவது இவர்கள் இருவரின் சந்திப்புக்கு பிறகு அதிபர் டிரம்ப் மம்தானியுடன் மிகவும் பயனுள்ள சந்திப்பு நடந்தது. அவர் மிகச் சிறந்த வேலையைச் செய்ய முடியும் எங்களுக்குள் ஒரு பொதுவான விஷயம் உள்ளது.

இருவரும் கைகுலுக்கி உற்சாகம்

இந்த நகரத்திற்காக மிகவும் சிறப்பாகச் செய்ய விரும்புகிறோம். மேயரை வாழ்த்த விரும்பினேன். ஆரம்பகால முதன்மைத் தேர்வுகளில் தொடங்கி, பல புத்திசாலி மக்களுக்கு எதிராக அவர் உண்மையிலேயே நம்பமுடியாத பந்தயத்தை நடத்தினார்.

மேலும் அவர் அவர்களை எளிதாக வென்றார், நான் நினைத்ததை விட நிறைய விஷயங்களில் அவர்கள் உடன்பட்டனர். இவ்வாறு அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மம்தானி பதில்

இவரைத்தொடர்ந்து மேயர் மம்தானி வாடகை, மளிகைப் பொருட்கள், பயன்பாடுகள், மலிவு விலை, வாழ்க்கைச் செலவு நெருக்கடி மற்றும் வீட்டுவசதி போன்ற பிரச்னைகள் குறித்து இருவரும் பேசியதாக தெரிவித்தார்.

மேலும் அதிபர் டிரம்ப் உடனான உரையாடலை நான் பாராட்டுகிறேன்? நியூயார்க்கர்களுக்கு மலிவு விலையில் அனைத்தும் கிடைக்க இணைந்து பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன் என்று கூறினார்.

டிரம்ப் உடனான சந்திப்பு என்னை ஆச்சரியப்படுத்தியது

இதைத்தொடர்ந்து, இன்று எங்களுக்கு ஒரு சந்திப்பு நடந்தது, அது என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. எனக்கு நியூயார்க் நகரம் மிகவும் பிடிக்கும்.

இந்த மேயர் பதவியில் உண்மையிலேயே சிறப்பாக இருக்கக்கூடிய சில விஷயங்களைச் செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

====