US President Donald Trump on Nobel Peace Prize : அமெரிக்காவின் அதிபராக 2வது முறை பதவியேற்றதில் இருந்து சர்வதேச விவகாரங்களில் டொனால்டு டிரம்ப் அதிக அளவில் ஈடுபட்டு வருகிறார்.
ஏழு போர்களை நிறுத்தி இருக்கிறேன் :
இதுவரை 7 போர்களை நிறுத்தி இருப்பதாக, கூறிக் கொள்ளும் அவர், இஸ்ரேல் - ஹமாஸ் போர்(Israel Hamas War Ceasefire) நிறுத்தத்திற்கு 20 அம்ச திட்டம் ஒன்றை அறிவித்தார். அதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்றுக் கொண்ட நிலையில், ஹமாஸ் ஒப்புக் கொண்டால், காசா பகுதியில் நிரந்தர அமைதி திரும்பும் வாய்ப்பு கிடைக்கும்.
காசாவில் போர் நிறுத்தம் டிரம்ப் நம்பிக்கை :
உக்ரைன் - ரஷ்யா போரை(Russia Ukraine War) நிறுத்துவதிலும் தொடர்ந்து தீவிரம் காட்டி வரும் அதிபர் டிரம்ப், குவான்டிகோ நகரில் ராணுவ அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்தும் முயற்சியின் இறுதி கட்டத்தில் உள்ளோம். ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லையெனில், அது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும்.
நோபல் பரிசு வழங்கா விட்டால்? :
எனவே, எனக்கு நோபல் பரிசு தராவிட்டால் அமெரிக்காவுக்கே ரொம்ப அவமானம் ஆகிவிடும். காசாவில் போர் நிறுத்தம் ஏற்பட்டால், எட்டு மாதங்களில் எட்டு போர்களை முடித்து வைத்தவனாக நான் இருப்பேன். இதைப்போல் யாரும் இப்படி செய்ததில்லை. இதற்காக எனக்கு நோபல் பரிசு(Nobel Peace Prize) கொடுப்பரா? என தெரியவில்லை.
நோபல் பரிசு டிரம்ப் வேதனை :
பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். எனது சாதனையை 'டிரம்ப் எப்படி போரை நிறுத்தினார்' என்று புத்தகம் எழுதுபவருக்கு அதை தந்து விடுவர். பொதுவாக எழுத்தாளர்களுக்கே நோபல் பரிசு செல்கிறது.
எனக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை(Donald Trump on Nobel Prize) என்றால், அது அமெரிக்காவுக்கே அவமானம் தான். காசா போரை நிறுத்தினால் நோபல் பரிசு கிடைக்கும் என நினைக்கிறேன்.
மேலும் படிக்க : ’Modi Welcomes’ : டிரம்பின் காசா போர்நிறுத்த முயற்சிக்கு வரவேற்பு
அக்.10 அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு :
அக்டோபர் 10ம் தேதி(Nobel Peace Prize Announcement Date 2025) அமைதிக்கான நோபர் பரிசு அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில், அதிபர் டிரம்ப் பகிரங்கமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
=\==============