US President Trump, announced South Africa was not invited to G20 summit in USA, also removed country's name from digital  Truth Social
உலகம்

G-20லும் டிரம்ப் அதகளம் : டிஜிட்டலில் தென்னாப்பிரிக்கா நீக்கம்

G20 Summit 2026 America: அமெரிக்காவில் நடக்கும் ஜி 20 மாநாட்டில் தென்னாப்பிரிக்காவுக்கு அழைப்பு இல்லை என்று கூறிய அதிபர் டிரம்ப், வெப்சைட் உள்ளிட்ட டிஜிட்டலிலும் அந்நாட்டின் பெயரை நீக்கி இருக்கிறார்.

Kannan

ஜி-20 அமைப்பு

G20 Summit 2026 America : ஜி-20 நாடுகள் என்பது பொருளாதார ஒத்துழைப்புக்கான ஒரு சர்வதேச அமைப்பு. இதில், இந்தியா, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளன. நடப்பாண்டுக்கான ஜி - 20 நாடுகளின் தலைமை பொறுப்பை தென்னாப்பிரிக்கா வகித்தது. அடுத்தாண்டுக்கான பொறுப்பு அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஜி-20 அமெரிக்கா தலைமை

அதன்படி, டிசம்பர் 1ம் தேதி முதல் அடுத்தாண்டு நவம்பர் 30ம் தேதி வரை, ஜி - 20 தலைமை பொறுப்பை அமெரிக்கா ஏற்றது.தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர்களுக்கு எதிராக இனவெறி கொள்கை கடைபிடிக்கப்படுவதாகும், மனித உரிமை மீறல்கள் நடப்பதாகவும் குற்றம்சாட்டி வரும் அதிபர் டிரம்ப், தென்னாப்பிரிக்க மாநாட்டை புறக்கணித்து விட்டார்.

தென்னாப்பிரிக்காவுக்கு அழைப்பில்லை

இந்தநிலையில், அடுத்தாண்டு புளோரிடா மாகாணம் மியாமியில் நடைபெறும் ஜி - 20 உச்சி மாநாட்டில் பங்கேற்க, தென்னாப்பிரிக்காவுக்கு அழைப்பு விடுக்கப்படாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். உலகின் எந்தவொரு அமைப்பிலும் உறுப்பினராக இருக்க தகுதியற்ற நாடு என்பதை தென் ஆப்ரிக்கா நிரூபித்துவிட்டதாக கடுமையாக விமர்சித்தார்.

தென்னாப்பிரிக்கா பெயர் நீக்கம்

இதற்கு அடுத்தபடியாக, தற்போது ஜி20 சமூக வலைதளத்தில் டிரம்பின் கருப்பு, வெள்ளை நிறப்படம் இடம்பெற்றுள்ளது. அதில் மியாமி 2026, சிறந்தது இன்னும் வரவில்லை என குறிப்பிடப்பட்டு உள்ளது. டிஜிட்டலிலும் கூட தென்னாப்பிரிக்கா பெயர் நீக்கப்பட்டுள்ளதால், ஜி -20 அமைப்பு(G20 Summit 2026) போர்க்களமாக மாறி உள்ளது. புதிய ஜி20 வலைத்தளம் படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவை புறக்கணிக்கும் தென்னாப்பிரிக்கா

அமெரிக்காவின் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து வரும் தென்னாப்பிரிக்கா, ஜி - 20 மாநாட்டின் முடிவில், தலைமை பொறுப்பை அமெரிக்க துாதரகத்தின் மூத்த பிரதிநிதியிடம் ஒப்படைக்க மறுத்து விட்டது குறிப்பிடத்தக்கது.

===