US President Trump's presidency is in danger as his own party is raising the war flag against him due to the Iran war google
உலகம்

பதவி இழக்கிறாரா அதிபர் டிரம்ப்? : சொந்த கட்சிக்குள் கடும் எதிர்ப்பு : 25வது சட்டப்பிரிவு தரும் விளக்கம் என்ன?

ஈரான் போர் காரணமாக அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிராக அவரது கட்சியினரே போரக்கொடி உயர்த்துவதால், அவர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

Kannan

தப்புக்கணக்கு போட்ட அமெரிக்கா

ஈரான் விவகாரத்தில் இஸ்ரேலின் நிர்பந்தத்திற்கு பணிந்து, அமெரிக்க படைகளை களமிறக்கினார் அதிபர் டொனால்டு டிரம்ப். ஒரு வாரத்தில் சண்டை ஓய்ந்து விடும் தப்புக்கணக்கு போட்டு விட்டார் டிரம்ப். இரண்டு நாடுகள் தாக்குதல் நடத்தியும் அசராமல் நிற்கிறது ஈரான்.

டிரம்பை எதிர்க்கும் அமெரிக்கா

அடுத்தடுத்து வெவ்வேறு கருத்துக்களை அதிபர் டிரம்ப் தெரிவித்து வருவதால், அமெரிக்கர்கள் மத்தியிலேயே கடும் எதிர்ப்புகளை பெற்று வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் குறிப்பிட்ட ஒரு சட்டப்பிரிவின் மூலம் டிரம்ப்பை பதவியிலிருந்து அகற்ற முயன்று வருகிறது ஜனநாயக கட்சி.

டிரம்பிற்கு எதிராக களமிறங்கும் ஜனநாயக கட்சி

ஈஸ்டர் திருநாளன்று அதிபர் டிரம்ப், தனது தனது சமுவலைதளம் மூலம் கோபமும் வன்மமான ஒரு கருத்தை பதிவிட்டார். அதில் ஈரானை அச்சுறுத்தியதுடன், சில மோசமான தகாத வார்த்தைகளை பயன்படுத்தினார். டிரம்பின் அந்தக் கருத்து, கடும் எதிர்வினைகளை பெற்று வருவதால் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் அவரை ஆட்சியிலிருந்து அகற்ற முயல்கின்றனர்.

பழிதீர்க்க முற்படும் டிரம்ப்

செவ்வாய்க்கிழமை ஈரானுக்கு முடிவு கட்டப்படும். மின்நிலையங்கள், பாலங்கள் தகர்க்கப்படும். ஹோர்முஸ் நீரிணையை திறக்கா விட்டால் கடுமையான தாக்குதல் நடத்தப்படும். ஈரானியர்கள் நரகத்தில் வாழ்வார்கள்” என்று தெரிவித்திருந்தார் டிரம்ப். சில தவறான வார்த்தைகளையும் ஆபாசமாக பதிவிட்டிருந்தார்.

அரசியல் சட்டத்தை கையிலெடுக்கும் எதிர்க்கட்சி

இந்நிலையில் ஜனநாயகக் கட்சியினர் 25வது திருத்தச் சட்டத்தை பயன்படுத்த அழைப்பு விடுத்துள்ளனர். ஜனநாயகக் கட்சி செனட்டர் கிறிஸ் மர்பி தனது இன்ஸ்டாகிராமில், "நான் டிரம்ப்பின் அமைச்சரவையில் இருந்திருந்தால், ஈஸ்டர் பண்டிகையின் போது 25வது திருத்தச் சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்து அரசியலமைப்புச் சட்ட வல்லுநர்களுடன் பேசியிருப்பேன். அவரது செய்வது பைத்தியக்காரத்தனமானது" என்று கூறியுள்ளார்.

25வது சட்டப் பிரிவு

முன்னாள் ஜனாதிபதி கென்னடி படுகொலை செய்யப்பட்ட பிறகு 1967-ல் நிறைவேற்றப்பட்ட அமெரிக்க அரசியலமைப்பின் ஒரு முக்கிய விதியாக இது இருக்கிறது.

ஜனாதிபதி இறந்துவிட்டால், பதவி விலகினால், பதவியிலிருந்து நீக்கப்பட்டால், அல்லது செயல்பட இயலாத நிலைக்கு ஆளானால், துணை ஜனாதிபதிக்கு அதிகாரத்தை மாற்றுவதற்கான ஒரு செயல்முறையை நிறுவுவதே இதன் நோக்கம். இதில், நான்காவது பிரிவை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதியை நீக்கும் அதிகாரம்

25வது சட்டப்பிரிவு நான்கின் படி, ஜனாதிபதியால் தனது கடமைகளைச் செய்ய இயலாது என்று எழுத்துப்பூர்வமாக அறிவிக்க, துணை ஜனாதிபதிக்கும் அமைச்சரவையின் பெரும்பான்மையினருக்கும் (15 பேரில் 8 பேர்) அதிகாரம் அளிக்க்கப்படுகிறது.

துணை ஜனாதிபதி அதிபராகலாம்

அதன்பிறகு, துணை ஜனாதிபதி உடனடியாகப் பொறுப்பு ஜனாதிபதியாகப் பதவியேற்பார். ஒருவேளை ஜனாதிபதி தன்னை தகுதியானவர் என்று அறிவித்தால், அமைச்சரவையும் துணை ஜனாதிபதியும் நான்கு நாட்களுக்குள் பிரிதிநிதிகள் மத்தியில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதை நிரூபிக்க வேண்டும்.

தினமும் டிரம்ப் மாற்றி மாற்றி பேசுவது, ஈரான் தனது தாக்குதலை உறுதியுடன் தொடர்வது, இவற்றை பார்க்கும் போது, அதிபரின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கு உரியதாக இருப்பதாக ஜனநாயக கட்சி கருதுகிறது.

இவை அமெரிக்காவுக்கும், உலகிற்கும் அச்சுறுத்தலாக அமையக் கூடும் என்ற அடிப்படையில், அமைச்சரவையோ அல்லது துணை ஜனாதிபதியோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஈரான் விவகாரத்தில் இதேநிலை தொடர்ந்தால், டிரம்பின் பதவி பறிக்கப்படும் என்றே சொல்லப்படுகிறது. மேலும், டிரம்பின் குடியரசுக் கட்சி சட்டம் இயற்றுபவர்களும் எதிர்ப்பு குரலை பதிவு செய்து வருகிறார்கள். இதேநிலை தொடர்ந்தால், டிரம்ப் பதவி பறிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

=====