US Spent ₹23,500 lakh Crore on the War in Iran: Shocking Revelation from the Pentagon! source:google
உலகம்

ஈரான் போர் : ரூ.2.35 லட்சம் கோடி.. அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பிரம்மாண்ட செலவினம்! பென்டகன் வெளியிட்ட தகவல்!

ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகளுக்காக அமெரிக்கா இதுவரை செலவிட்டுள்ள தொகை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

Kavitha prasanna

US Spent ₹23,500 Crore on the War in Iran: Shocking Revelation from the Pentagon!

அமெரிக்கா அதிகாரப்பூர்வ தகவல்

மேற்காசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகளுக்காக அமெரிக்கா இதுவரை செலவிட்டுள்ள தொகை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரூ.2.35 லட்சம் கோடி.. பென்டகன் தகவல்

அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தின் கீழ் நடத்தப்பட்ட இந்த போர் நடவடிக்கைகளுக்காக சுமார் 25 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 2 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

மேற்காசிய போரின் பின்னணி

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா ஈரானுக்கு எதிராகத் தாக்குதல்களைத் தொடங்கியது. இந்தத் தாக்குதலின் ஆரம்ப கட்டத்திலேயே ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

வரலாறு காணாத பதற்றம்

இதற்குப் பதிலடியாக, ஈரான் ராணுவம் மேற்காசியாவிலுள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது கடுமையான ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இதனால் அப்பிராந்தியத்தில் வரலாறு காணாத அளவில் பதற்றம் அதிகரித்தது.

செலவினங்கள் குறித்த விவரம்

இது குறித்து பென்டகனின் தற்காலிகக் கணக்காய்வாளர் ஜேல்ஸ் ஹர்ஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விளக்கியுள்ளார்.

அதில் "இந்த 25 பில்லியன் டாலர் செலவினமானது நவீன ஆயுதங்களின் பயன்பாடு, போர்க் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களின் இயக்கம், ராணுவ வீரர்களுக்கான ஊதியம், பராமரிப்புப் பணிகள் மற்றும் போரில் இழந்த ஆயுதங்களை ஈடு செய்தல் போன்ற காரணங்களுக்காக செலவிடப்பட்டது" என்று தெரிவித்துள்ளார்.

பாதிப்புகளும் தற்காலிக போர் நிறுத்தமும்

நீண்ட நாட்களாகத் தொடர்ந்த இந்தப் போரினால் இரு தரப்பிலும் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக அமெரிக்காவின் போர் விமானங்கள், ட்ரோன்கள் மற்றும் ரேடார் கருவிகள் உள்ளிட்ட ராணுவச் சொத்துக்கள் ஈரானின் தாக்குதலால் பெரும் சேதமடைந்தன.

தற்காலிகப் போர் நிறுத்தம்

தற்போது அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் நோக்கில் தற்காலிகப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், எதிர்காலச் செலவுகள் குறித்த கேள்விக்கு அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

இன்னும் பல ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படலாம்

ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை அடையக்கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாகவும், ஈரானின் தாக்குதலால் சேதமடைந்த அமெரிக்கத் தளங்களைச் சீரமைக்க இன்னும் பல ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படலாம் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு நிதியில் பெரும் தாக்கம்

இந்தப் போர்ச் செலவுகள் சர்வதேசப் பொருளாதாரத்திலும், அமெரிக்காவின் உள்நாட்டு நிதியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கருதப்படுகிறது.

=====