Venezuela has emerged as India's 'top 3' oil supplier  google
உலகம்

இந்தியாவின் 'டாப் 3' எண்ணெய் சப்ளையர் : உருவெடுத்திருக்கும் வெனிசுலா!

ஏப்ரலில் நாள் ஒன்றுக்கு 2.83 லட்சம் பேரல்களாக இருந்த வெனிசுலாவிய எண்ணெய் இறக்குமதி அதிகரித்துள்ளது.

Rohini

கச்சா எண்ணெய் வாங்க எதிர்ப்பு

இந்தியாவும் மற்ற நாடுகளை போல ரஷ்யாவிடம் அதிகம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்த நாடுகளில் ஒன்றாக இருந்து வந்த நிலையில் இந்த கொள்முதலிற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடும் எதிர்ப்பினை தெரிவித்தார். இந்தியா மீது கூடுதல் வரிகளையும் விதித்திருந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவும் அமெரிக்காவும் வர்த்தகம் தொடர்பாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது எனபது குறிப்பிடத்தக்கது.

இந்தியா -வெனிசுலா ஒப்பந்தம்

அமெரிக்கா அதிபரின் வரிவிதிப்பு காரணமாக இந்தியா பேச்சுவார்த்தை மேற்கொண்ட பிறகு ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை குறைத்துக் கொள்ள இந்தியா சம்மதம் தெரிவித்ததாக அதிபர் ட்ரம்ப் கூறினார்.

இதனை அடுத்து வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலைச் செய்ய இந்தியா ஒப்புக்கொண்டது.

ரஷ்யாவிற்கு பதிலாக ஈடுகட்ட மற்ற நாடுகளில் எண்ணெய் கொள்முதல்

அமெரிக்காவின் நெருக்கடியை அடுத்து ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தியுள்ள இந்தியா, அதை ஈடுகட்ட சவூதி அரேபியா, வெனிசுலா ஆகிய நாடுகளில் இருந்து வாங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நீடிக்கும் போர் பதற்றம் : எரிப்பொருள் தட்டுப்பாடு

இந்த நிலையில் ஈரான் அமெரிக்க இடையே நீடித்து வரும் போர் சூழல் காரணமாக வளைகுட நாடுகள் பெரிதளவில் பாதிபை சந்தித்து வருகிறது.

குறிப்பாக சவுதி , கத்தார் போன்ற முக்கிய எண்ணெய் வயல்களி மீது தொடர் தாக்குதல்களை நடத்தியது .இது உலகளவில் எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு வித்திட்டது

சமையல் எரிபொருள் , பெட்ரோல் தட்டுப்பாடு

ஹோர்மூஸ் நீரினையை ஈரான் மூடியிருந்தநிலையில் உலகளவிஉல் எரிபொருளுக்கான தட்டுப்பாடு ஏற்ப்பட்டது .குறிப்பாக சமையல் எரிப்பொருள் , பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்றுமதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது

டாப் 3 சப்ளையராக உருவெடுத்திருக்கும் வெனிசுலா

சவூதி அரேபியா, அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி, மே மாதத்தில் இந்தியாவின் 3வது மிகப்பெரிய கச்சா எண்ணெய் விநியோக நாடாக வெனிசுலா உருவெடுத்தது.

ஏப்ரலில் நாள் ஒன்றுக்கு 2.83 லட்சம் பேரல்களாக இருந்த வெனிசுலாவிய எண்ணெய் இறக்குமதி, மே 1-20 தேதிகளில் 47% அதிகரித்து 4.17 லட்சமாக உயர்ந்துள்ளது. நாள் ஒன்றுக்கு 19 லட்சம் பேரல்களுடன் ரஷ்யா முதலிடம், 5.6 லட்சத்துடன் UAE 2ம் இடத்தில் உள்ளது.

===================