Venezuelan president Nicolas Maduro arrested Cause Cheap crude oil prices due to Donald Trump Google
உலகம்

வெனிசுலா அதிபர் கைது எதிரொலி : மலிவானது கச்சா எண்ணெய் விலை!

Donald Trump on Nicholas Maduro Arrest : வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ, அமெரிக்காவால் கைது செய்யப்பட்டதன் தாக்கம் உலக சந்தைகளில் மிதமாக எதிரொலிக்கும் நிலையில், கச்சா எண்ணெய் விலை சரிவடைந்துள்ளது.

Baala Murugan

நிகோலஸ் மதுரோ கைதால் கச்சா எண்ணெய் விலை குறைவு

Donald Trump on Nicholas Maduro Arrest : வர்த்தகம் துவங்கிய சிறிது நேரத்தில், அமெரிக்காவின் கச்சா எண்ணெய் விலை, ஒரு பேரல் 56.96 டாலராக குறைந்தது. சர்வதேச தரத்திலான பிரென்ட் ரக கச்சா எண்ணெய் விலை, 34 சென்ட் குறைந்து 60.41 டாலராக இருந்தது.

வெனிசுலாவின் தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தி, 1990களில் கிட்டத்தட்ட 35 லட்சம் பேரல்களாக இருந்த நிலையில், தொடர் தடை விதிப்புகளால், தற்போது 11 லட்சம் டன் பேரல்களாக குறைந்து விட்டது. மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, வெனிசுலா கச்சா எண்ணெய் உற்பத்தியில் அமெரிக்கா தலையிடும் என்ற டிரம்ப் அறிவிப்பால், உற்பத்தி அதிகரிக்கப்படும் என கருதப்படுகிறது.

அமெரிக்க நிதி சந்தைகளில் தாக்கம்

இதனால், கடந்த ஆறு மாதங்களாக தேவை அதிகரிக்காததால், கச்சா எண்ணெய் உற்பத்தி சமநிலையில் நீடித்தது. தற்போது அது அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதி, அதன் சந்தை விலை சிறிது சரிவு கண்டுள்ளது.அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கைகளை அமெரிக்க நிதி சந்தைகளில் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

அங்கு தங்கத்தின் விலை 2.70 சதவீதமும் வெள்ளியின் விலை 6.60 சதவீதமும் உயர்ந்துள்ளது. பாதுகாப்பான முதலீடு என்று முதலீட்டாளர்கள் கருதுவதால் தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த உலோகங்களில் விலை அதிகரித்துள்ளது. உக்ரைன், மத்திய கிழக்கு, கிழக்காசியா, அமெரிக்க - சீன வர்த்தக யுத்தம்,எனபல்வேறு நாடுகளின் நிதிக்கொள்கைகளை பங்குச்சந்தை வல்லுநர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

அமெரிக்காவின் மத்திய வங்கி வெளியிட உள்ள அறிக்கை, சேவை துறை, நுகர்வோர் மனநிலை, வேலைவாய்ப்பு குறித்த அறிக்கைகள் அடுத்தடுத்து வெளியாக உள்ள நிலையில் அவற்றையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ரிலையன்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது

நாட்டிலேயே அதிகளவு கச்சா எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யும் ரிலையன்ஸ் நிறுவனம்,3 வாரங்களாக அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யவில்லை எனவும், ஜனவரியிலும் இறக்குமதி டெலிவரி ஏதுமில்லை எனவும் கூறியுள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்

ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக தடைகளை அடுத்து, ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பை நிறுத்தி விட்டதாக நவம்பரிலேயே ரிலையன்ஸ் கூறியிருந்தது. ரஷ்ய எண்ணெயுடன் கூடிய மூன்று கப்பல்கள் ரிலையன்ஸின் ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்வதாக தரவு ஆய்வு நிறுவனமான 'கெப்லர்' நிறுவன அறிக்கையை மேற்கோள் காட்டி 'ப்ளூம்பெர்க்' அறிக்கை வெளியானது.

அதனை ரிலையன்ஸ் மறுத்துள்ளது.டிரம்பின் தொடர் அறிவிப்பால் அனைத்து நாடுகளும் தொடர்ந்து, அழுத்தத்திற்கு உள்ளாகி வருவதால், நிக்கோலஸ் மதுரோ கைதுக்கு குறிப்பிட்ட நாடுகளில் டிரம்பிற்கு எதிர்ப்பும், கண்டனமும் தொடர்ந்து வருகிறது.