"When India's Territorial Integrity Was Under Threat, Russia Supported Us": Jaishankar Google
உலகம்

Jaishankar States : இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டபோது ரஷ்யா உதவியது"

இந்தியா - ரஷ்யா உறவு குறித்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர்; நாடுகள் தங்களது அனுபவத்தின் அடிப்படையில்தான் உறவுகளை மதிப்பிடும் என கருத்து ...

NARENDRAN K

இந்தியா - ரஷ்யா உறவு குறித்து ஜெய்சங்கர் பேச்சு:

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை சவாலுக்கு உள்ளான முக்கியமான காலங்களில் ரஷ்யா இந்தியாவுக்கு ஆதரவாக இருந்ததாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா - ரஷ்யா உறவு குறித்து நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பல நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்த நேரத்திலும் ரஷ்யா இந்தியாவின் பக்கம் நின்றதாக கூறினார்.

"நாடுகள் தங்கள் அனுபவத்தின் அடிப்படையில் முடிவு எடுக்கும்"

ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாடு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜெய்சங்கர், ஒவ்வொரு நாடும் தனது சொந்த அனுபவங்களின் அடிப்படையில்தான் வெளிநாட்டு கொள்கைகளை வகுக்கும் என்று தெரிவித்தார்.

இந்தியாவைப் பொறுத்தவரை, ரஷ்யாவுடனான உறவு பல தசாப்தங்களாக நம்பிக்கையின் அடிப்படையில் வளர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"கடினமான நேரத்தில் ரஷ்யா ஆதரவு அளித்தது"

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் எல்லை ஒருமைப்பாடு சவாலுக்கு உள்ளான காலங்களில் உலகின் பல நாடுகள் பாகிஸ்தானின் ராணுவ ஆட்சிக்கு ஆதரவாக இருந்ததாகவும், அப்போது ரஷ்யா இந்தியாவின் நலன்களை புரிந்துகொண்டு ஆதரவளித்ததாகவும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

அந்த வரலாற்று அனுபவங்களே இன்றும் இந்தியா - ரஷ்யா உறவை வலுப்படுத்தி வருவதாக அவர் கூறினார்.

உக்ரைன் போர் குறித்து இந்தியாவின் நிலைப்பாடு

ரஷ்யாவுடனான நட்புறவை இந்தியா தொடர்ந்தாலும், உக்ரைன் போரில் இந்தியா அமைதி மற்றும் பேச்சுவார்த்தையையே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

"இது போர் நடத்த வேண்டிய காலம் அல்ல" என்ற பிரதமர் நரேந்திர மோடியின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய ஜெய்சங்கர், பிரச்சினைகளுக்கு தீர்வு பேச்சுவார்த்தை மூலமே கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

சர்வதேச அரங்கில் கவனம்

ரஷ்யா - உக்ரைன் போர் நீடித்து வரும் நிலையில், ஜெய்சங்கரின் இந்த கருத்துகள் சர்வதேச அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளன.

இந்தியா ஒரு புறம் ரஷ்யாவுடனான பாரம்பரிய நட்புறவை பேணிக்கொண்டே, மறுபுறம் போரை முடிவுக்கு கொண்டுவரும் அமைதி முயற்சிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

=================