Tragedy in Afghanistan: Women's Higher Education Faces an Uncertain Future, Says UNESCO Report Ai Generated
உலகம்

ஆப்கானிஸ்தானில் பரிதாபம் : பெண்களுக்கு கேள்விகுறியான உயர்கல்வி : 24 லட்சம் சிறுமிகள் பாதிப்பு

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியில் பெண்களுக்கு தொடர்ந்து மறுக்கப்படும் உயர்கல்வி பெண்கள் வேதனை ...

NARENDRAN K

தலிபான் ஆட்சியில் மறுக்கப்படும் பெண்களுக்கான கல்வி :

தலிபான் ஆட்சி 2021 அமலுக்கு வந்ததிலிருந்து பெண்கள் நிலைமை மிக மோசமாக இருந்து வருகிறது குறிப்பாக பெண்களுக்கான உயர் கல்வி வாய்ப்பு என்பது தொடர்ந்து மறுக்கப்பட்டு பெண்கள் தங்களது தொடக்க கல்வியிலே தேங்கி கிடக்கிறார்கள் என யுனெஸ்கோ அமைப்பானது கவலை தெரிவித்து இருக்கிறது .

யுனெஸ்கோ அமைப்பு வெளியுட்டுள்ள அறிக்கை :

இது குறித்து யுனெஸ்கோ (UNESCO) அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆஃப்கானிஸ்தானில் கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பெண்களுக்கு மேனிலை மற்றும் உயர்கல்வி மறுக்கப்பட்டு வருகிறது.

2021-ஆம் ஆண்டிலிருந்து தொடக்கப் பள்ளிக்கு மேல் பெண்கள் படிக்கத் தடை விதிக்கப்பட்டதால் சுமார் 24 லட்சம் பெண் குழந்தைகள் தங்கள் மேல்நிலைக் கல்வியைத் தொடர முடியாமல் போயுள்ளனர்.அ

துமட்டுமின்றி, 2022 முதல் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்கவும், வேலைக்குச் செல்லவும், வெளியில் வரவும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

2021- 2026 வரை நிலைமை :

ஆப்கானிஸ்தான் இருக்க கூடிய பெண்கள் சுமார் 10 லட்சம் வரை கல்வியில் முன்னேறி பயின்று வந்தனர் ஆனால் தலிபான் கையில் ஆட்சி அமைந்த பின்னர் இந்த நிலைமை மிக மோசமான நிலையில், பெண்களுக்கான உயர்கல்வி முற்றிலும் பாதிப்பு அடைந்துவிட்டது.

ஆனால் தற்பொழுது 2026 ஆண்டு பார்த்தால் அது மிகவும் சரிந்து சுமார் ஒரு தலைமுறையினரின் கல்வியே கேள்விக்குறியாகி இருக்கிறது என்பது தெரியவந்து இருக்கிறது

இது அந்த நாட்டில் உள்ள பெண்களின் எதிர்காலம் மற்றும் அந்த நாட்டினுடைய கலாச்சாரம் ,சமூக கட்டமைப்பு என பல்வேறு விசயங்களை பாதிக்கும் என பல்வேறு அமைப்புகள் மற்றும் யுனெஸ்கோ அறிவுறுத்திய போதிலும் அந்த அரசாங்கம் அதனை பொருட்படுத்தவில்லை என யுனெஸ்கோ வருத்தம் தெரிவித்திருக்கிறது

பெண்களுக்கு தலிபான் அரசு விதித்த கட்டுப்பாடுகள் :

  • பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லத் தடை

  • கல்லூரிகளில் பெண்கள் உயர்கல்வி பயில முற்றிலும் தடை

  • பெண்கள் நடத்தி வந்த அழகு நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

  • பெண்கள் ஆண் துணையின்றி வெளியேற தடை

  • பொதுவெளியில் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டது.

  • பொது இடங்களில் பெண்கள் சத்தமாகப் பேசவோ அல்லது உரக்கப் பாடவோ கூடாது

  • இதுமட்டுமல்லாமல் பல்வேறு கட்டுப்பாடுகளை தலிபான் அரசு அந்த நட்டு பெண்களுக்கு விதித்து இருக்கிறது குறிப்பிடத்தக்கது .