world is praising Indian pilot Sumit Machhar, who saved the lives of 172 passengers by disregarding his own life source:thamizhalai,ai generated
உலகம்

கேப்டனுக்கு கத்திக்குத்து, விமானத்தை தரையில் மோத சதி : 172 பயணிகளை காப்பாற்றிய சுமித் மச்சார் : உலகமே பாராட்டு..!

தனது உயிரை துச்சமாக மதித்து 172 பயணிகளின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி சுமித் மச்சாரை, உலகமே பாராட்டி வருகிறது.

Kannan

துபாயில் இருந்து இஸ்ரேலுக்கு பயணித்த விமானம்

இஸ்ரேலை சேர்ந்த சுற்றுலா பயணிகள் துபாய்க்கு சுற்றுலா வந்து விட்டு செல்வது வழக்கம், அப்படி வந்தவங்க துபாய் சர்வதேச விமான நிலையத்தில இருந்து போயிங் 737 மேக்ஸ் 8 என்ற விமானத்தில புறப்பட்டாங்க. பயணிகள், விமான சிப்பந்திகள் என 180 பேர் இதுல பயணிச்சாங்க.

தலைமை கேப்டன் சுமித் மச்சார்

தலைமை கேப்டனான இந்திய வம்சாவளியை சேர்ந்த சுமித் மச்சார், துணை கேப்டனாக ஓமனை சேர்ந்த நபரும் விமானத்தை இயக்கினாங்க. எல்லாம் நல்லபடியா தான் போய்க்கிட்டு இருந்திச்சு. 34 ஆயிரம் அடி உயரத்துல விமானம் பறந்து கொண்டிருந்த போது, கற்பனையும் செய்ய முடியாத ஒரு விபரீதம் நிகழ்ந்துச்சு.

கேப்டனை கத்தியால் குத்திய துணைகேப்டன்

திடீரென துணை கேப்டன் தான் மறைச்சு வச்சி இருந்த கத்தியை எடுத்து, தலைமை விமானி சுமித் மச்சாரை சரமாரியாக குத்தினாரு. ரத்த வெள்ளத்தில் மிதந்த மச்சார் வலியால் அலறினாரு. காக்பிட் அறை எப்போதும் போல மூடப்பட்டு இருந்ததால, உள்ளே என்ன நடந்தது அப்படின்னு பயணிகளுக்கு தெரியாது.

விமானத்தை தரையில் மோத சதி

தலைமை விமானியை கத்தியால் குத்திய துணை விமானி, பிறகு விமானத்தை தரையில் மோத செய்யற விதமாக கீழ் நோக்கி வேகமாக செலுத்த ஆரம்பிச்சாரு.

நிமிடங்களுக்கு 17,400 அடி என்ற கணக்கில விமானமானது, செங்குத்தாக கீழே வேகமாக இறங்க ஆரம்பிச்சது. ஏதோ விபரீதம் நடக்குது அப்படிங்கறத உணர்ந்து பயணிகள் பயத்தால் அலறினாங்க.

துரிதமாக செயல்பட்ட கேப்டன் மச்சார்

நிலைமை விபரீதமாகி விட்டத உணர்ந்த கேப்டன் சுமித் மச்சார், இன்னும் சில நொடிகள் தாமதிச்சாலும், விமானம் தரையில் மோதி வெடித்து சிதறும், யாரும் உயிர்தப்ப முடியாது அப்படிங்கறத புரிஞ்சிக்கிட்டு, கத்திக் குத்தின் வலியை பொருட்படுத்தாம, காக்பிட் அறையை திறந்து விட்டாரு.

மோசமான நிலையில கேப்டன் இருக்கிறதையும், துணை கேப்டன் கையில் கத்தியோட நிக்கிறதையும் பார்த்த பயணிகள், விமானத்தில் இருந்த இஸ்ரேல் வீரர்கள் சிலர் அதிரடியாக செயல்பட்டு, ஓமன் துணை விமானியை மடக்கி பிடிச்சாங்க.

விமானத்தில பயணிச்ச மாற்று விமானிங்க, உடனே காக்பிட் அறைக்குள் புகுந்து, விமானத்த தங்களோட கட்டுப்பாட்டுல கொண்டு வந்தாங்க. விமான பணிப்பெண்கள், கேப்டன் சுமித் மச்சாருக்கு முதலுதவி சிகிச்சை கொடுத்து, ரத்தப் போக்கை கட்டுப்படுத்தினாங்க.

சவுதியில் பத்திரமாக தரையிறக்கம்

இந்தநிலையில, சவுதி அரேபியாவின் வான் வெளிக்கும் பறந்து கொண்டிருந்த விமானத்தில் இருந்து விமானக் கடத்தலைக் குறிக்கும் ‘7500’ ஆகிய எச்சரிக்கை சிக்னல்கள் அருகில் இருந்த விமான நிலையங்களுக்கு அனுப்பப்பட்டது.

உடனே அனைத்து விமான நிலையங்களும் உஷாராகின. ஆபத்தில் சிக்கிய விமானத்தை தரையிறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இஸ்ரேல் போர் விமானங்களும் சீறிப்பாய, ‘தபூக்’ ராணுவ மற்றும் சிவில் விமான நிலையத்தில் பாதுகாப்பா தரையிறக்கப்பட்டது.

துணை கேப்டன் கைது, மச்சாருக்கு சிகிச்சை

துணை கேப்டன் கைது செய்யப்பட, கேப்டன் சுமித் மச்சார் மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டாரு. விமானத்தில இருந்த பயணிகள் உட்பட அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டாங்க.

உலகை உலக்கிய தீவிரவாத செயல்

சினிமாவ மிஞ்சுவது போல நடந்த இந்த சம்பவம், உலகையே உலுக்கி இருக்கு. அதேசமயம், ரத்த வெள்ளத்தில மிதந்தாலும், பயணிகள் உயிர் தான் முக்கியம், எந்தக் காரணம் கொண்டும் விமானம் தரையில் மோதக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து 172 உயிர்களை பத்திரமாக காப்பாற்றிய, கேப்டன் சுமித் மச்சாருக்கு பாராட்டுகள் குவிஞ்சு வருது.

துணை கேப்டனிடம் தீவிர விசாரணை

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக இந்த சதியை அரங்கேற்ற முயற்சியா என்ற சந்தேகமும் எழுந்து இருக்கு. ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானி, விமானத்தை தரையில் மோதி வெடிக்க செய்ய மேற்கொண்ட முயற்சியின், பின்னால, எந்த பயங்கரவாத அமைப்பு இருக்கு என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டு இருக்கு.

பிரதமர் மோடி பாராட்டு

கேப்டன் சுமித் மச்சாரின் வீரத்தை பாராட்டி இருக்கிற பிரதமர் நரேந்திர மோடி, இந்திய பெருமை கொள்றதா குறிப்பிட்டு இருக்காரு. ஆபத்தை எதிர் கொண்ட போதும், படுகாயம் அடைந்த போதும், மற்றவர்களின் உயிரை காப்பாற்ற உறுதியாக அவர் செயல்பட்டதால, இந்தியாவுக்கு மிகப்பெரிய பெருமை கிடைச்சு இருக்கு, அப்படின்னு சொல்லி இருக்காரு.

சுமித் மச்சார் ’ரியல் ஹீரோ’ - நெதன்யாகு

சுமித் மச்சாரின் துணிகர செயலை மிகப்பெரிய கௌரவமாக நினைப்பதா சொல்லி இருக்கிற, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அவர் தான் ரியல் ஹீரோ அப்படின்னு சொல்லி இருக்காரு. இஸ்ரேல் மக்கள் அவரது வீரத்தை ஒருநாளும் மதிக்க மாட்டாங்க, அப்படின்னு பாராட்டி இருக்காரு.

டிரம்ப், புதின் பாராட்டு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின் உட்பட உலகத் தலைவர்கள் பல பேரு, பயங்கரவாத செயலை வன்மையா கண்டிச்சு இருக்கிறதோட, சுமித் மச்சாருக்கு பாராட்டுகளை தெரிவிச்சு இருக்காங்க. ஆகவே, உலகமே கொண்டாடுற ஹீரோவா இன்னிக்கு நிக்கிற அவரு, இந்தியாவின் பெருமையை மேலும் உயர்த்தி இருக்காரு.

ஒரு தனி மனிதனா, 172 பேரோட உயிர்களை காப்பாத்தி இருக்கிறதோட, நடுவானில் நடக்க இருந்த மிகப்பெரிய பயங்கரவாத செயலை முறியடிச்சு இருக்காரு சுமித் மச்சார்.

========================