உலக மக்கள்தொகை தினம்
உலகெங்கும் வாழும் மக்களின் உரிமைகள், சுகாதாரம், பாலின சமத்துவம் மற்றும் நிலையான வளர்ச்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் ஜூலை 11ம் தேதி, உலக மக்கள்தொகை தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஐநா உருவாக்கிய தினம்
1987ம் ஆண்டு இதே நாளில் உலக மக்கள்தொகை 500 கோடியை (5 பில்லியன்) எட்டியது. இதை மையமாகக் கொண்டு, உலகளாவிய மக்கள் தொகை வளர்ச்சி, குடும்பக் கட்டுப்பாடு மற்றும் பாலின சமத்துவம் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த ஐ.நா. சபை 1989ல் இந்த தினத்தை உருவாக்கியது.
உலக மக்கள்தொகை 830 கோடி
உலக மக்கள்தொகை தற்போது 830 கோடியை தாண்டியுள்ளது. இந்தியாவின் மக்கள் தொகையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், வளமான எதிர்காலத்திற்கு நிலையான வளர்ச்சி மற்றும் குடும்பக் கட்டுப்பாடு மிகவும் அவசியமாக கருதப்படுகிறது.
8 நாடுகளின் கையில் முடிவு
உலக அளவில் 180க்கும் மேற்பட்ட நாடுகள் இருந்தாலும், மக்கள்தொகை வளர்ச்சியை தீர்மானிப்பதில் 8 நாட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவைதான் வருங்காலத்தில் உலக அளவில் பல்வேறு வளர்ச்சி, பாதிப்புகளுக்கு முக்கிய காரணியாக இருக்க போகின்றன.
முதலிடத்தில் இந்தியா
சீனாவை விஞ்சி இப்போது இந்தியாவின் மக்கள் தொகை என்பது 147 கோடியாக இருக்கிறது. அதேசமயம், இந்தியாவின் மனித வளம் உலக வளர்ச்சிக்கு பயன்படுகிறது என்பதை மறுக்க முடியாது.
நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ, எத்தியோப்பியா, தான்சானியா, பிலிப்பைன்ஸ், எகிப்து நாடுகளிலும் மக்கள்தொகை வளர்ச்சி என்பது அதிகமாகவே உள்ளது.
ஆப்பிரிக்கவை நோக்கி நகரும் மக்கள்தொகை பெருக்கம்
8 நாடுகளில் மூன்று நாடுகள் ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்தவை. எதிர்காலத்தில் மக்கள்தொகை வளர்ச்சி என்பது, ஆப்பிரிக்க கண்டத்தை நோக்கி நகர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவது என்பது இந்த நாடுகளுக்கு பெரும் சவாலாக இருக்கும்.
======================
..