World's First 'Air Taxi' Terminal in Dubai: A 45-Minute Journey Now Possible in Just 10 Minutes! source: google
உலகம்

துபாயில் உலகின் முதல் 'ஏர் டாக்ஸி' முனையம் : 45 நிமிடப் பயணம் இனி வெறும் 10 நிமிடங்களில் சாத்தியம்!

துபாய் நகரம் உலகின் முதல் பிரத்யேக 'ஏர் டாக்ஸி' நிலையத்தை அமைத்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

S Kavitha

World's First 'Air Taxi' Terminal in Dubai: A 45-Minute Journey Now Possible in Just 10 Minutes!

துபாயில் அறிமுகமாகும் முதல் ஏர் டாக்ஸி

எதிர்கால நகரப் போக்குவரத்தில் ஒரு புதிய மைல்கல்லை எட்டும் வகையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரம் உலகின் முதல் பிரத்யேக 'ஏர் டாக்ஸி' நிலையத்தை அமைத்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீர்வு

அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், நகரின் சாலைப் போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு நிரந்தரத் தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிநவீன வசதிகளுடன் கூடிய வெர்டிப்போர்ட்

துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு மிக அருகில், சுமார் 3,100 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த நான்கு அடுக்கு முனையம் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

Vertiport தளங்கள்

இதில் விமானங்கள் செங்குத்தாகத் தரையிறங்கும் மற்றும் மேலே எழும்பும் வசதி கொண்ட 'வெர்டிப்போர்ட்' தளங்கள் உள்ளன.

சிறப்பம்சங்கள்

மேலும், ஒரே நேரத்தில் பல ஏர் டாக்ஸிகளுக்கு மின்னல் வேகத்தில் சார்ஜிங் செய்யும் வசதி மற்றும் சர்வதேச விமான நிலையங்களுக்கு இணையான சொகுசு பயணிகள் ஓய்வறைகள் இம்முனையத்தில் இடம்பெற்றுள்ளன.

நேரத்தை மிச்சப்படுத்தும் வான்வழிப் பயணம்

துபாயின் சாலைகளில் நிலவும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, துபாய் விமான நிலையத்திலிருந்து பிரபல சுற்றுலாத் தலமான பாம் ஜுமைரா பகுதிக்குச் செல்ல பொதுவாக 45 நிமிடங்கள் வரை ஆகும்.

10 நிமிடத்தில் இலக்கை எட்ட முடியும்

ஆனால், இந்த ஏர் டாக்ஸி சேவையைப் பயன்படுத்துவதன் மூலம் அந்தத் தூரத்தை வெறும் 10 நிமிடங்களில் கடக்க முடியும். இது சுற்றுலாப் பயணிகளுக்கும், அவசரத் தேவைகளுக்காகப் பயணிப்பவர்களுக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.

பயன்பாடு மற்றும் செயல்திறன்

ஆண்டுக்கு சுமார் 1.70 லட்சம் பயணிகளைக் கையாளும் திறன் கொண்ட இந்தச் சேவை, இந்த ஆண்டின் இறுதிக்குள் வணிக ரீதியாகப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

மொபைல் ஆப் மூலம் எளிமையான சேவை

பயணிகள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் உள்ள மொபைல் ஆப் மூலமே இந்தச் சேவையை எளிதாக முன்பதிவு செய்துகொள்ளலாம். துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் (Sheikh Hamdan) இந்த முனையத்தை நேரில் ஆய்வு செய்து, பணிகளின் தரத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

துபாயை தொழில்நுட்ப நகரமாக மாற்றுவதில் முக்கியப் பங்கு

எமிரேட்ஸ் மற்றும் ஜோபி ஏவியேஷன் (Joby Aviation) போன்ற நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படும் இத்திட்டம், துபாயை உலகின் மிகச்சிறந்த தொழில்நுட்ப நகரமாக மாற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

யார் இந்த ஜோபி ஏவியேஷன்?

அமெரிக்காவைச் சேர்ந்த ஜோபி ஏவியேஷன் நிறுவனம் இதற்கான அதிநவீன மின்சார விமானங்களை வழங்குகிறது.

சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் மின்சார ஏர் டாக்ஸி

சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் மின்சார ஏர் டாக்ஸிகள் என்பதால், இது பசுமைப் போக்குவரத்திற்கும் ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.

===