ஆர்சிபி, ராஜஸ்தான் அணிகள் : வாங்க முந்தும் உலக முதலீட்டாளர்கள்

Rohini

ஆர்சிபி அணியை வாங்க 8 முதலீட்டாளர்கள் இருப்பதாக இறுதி பட்டியலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது .அதனபடி அணியின் மதிப்பு 1.2 முதல் 1.8 பில்லியன் அமெரிக்க டாலர் வரை இருக்கும் என கணிக்கப்படுகிறது

RCB | Getty image

ராஜஸ்தான் ராயல்ஸ் 5 முதலீட்டாளர்கள் இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மதிப்பு 1.2 முதல் 1.4 பில்லியன் டாலர் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

ராஜஸ்தான் ராயல்ஸு | google

ஆர்சிபி அணியை வாங்குவதற்கான முதலீட்டாளர்கள் பட்டியலில், மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பின் இணை உரிமையாள்ர் அவ்ரம் கிளேசர், மணிப்பால் குழுமம், சீரம் இன்ஸ்டிட்யூட் உரிமையாளர் அதார் பூனாவாலா, டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம், பிரபல தனியார் முதலீட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர்.

investors for RCB includes Manchester United co-owner Avram Glazer | google

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கான போட்டியிலும் இதேபோல் சர்வதேச முதலீட்டாளர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ,மனோஜ் பாதாலே தலைமையிலான ‘எமெர்ஜிங் மீடியா’ நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது .

Rajasthan Royals is controlled by Emerging Media, a company led by Manoj Patale. | google

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கான இறுதி ஒப்பந்தப் புள்ளிகள் மார்ச் முதல் வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஆர்சிபி அணி தொடர்பான ஒப்பந்தப் புள்ளி தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை; ஆனால் பிப்ரவரியில் நடைபெறும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட்டின் வணிக மதிப்பு உலக அளவில் எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதைக் காட்டும் முக்கிய செய்தியாக இது பார்க்கப்படுகிறது

commercial value of IPL cricket | google