Rohini
பாதி நிலையில் வேக வைத்த சிக்கன் போன்ற உணவுகள் தற்போது உன்ன வேண்டாம் என்றும் கூறியிருந்தார் தவிர ஹாஃப் பாயில் சாப்பிடக்கூடாது என்ற கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் .
H5N1 வைரஸ் தொற்று இறந்த பறவைகளிடையேயே உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து சென்னையில் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளாக அரசு விரிவான வழிகாட்டு நெறிமுறை வெளியிட்டுள்ளது.
தற்போது பரவி வரும் ஏவியன் இன்ஃபுளுயன்சா (Avian Influenza) எனப்படும் பறவைக் காய்ச்சலை H5N1 என்று கூறப்படுகிறது .இது தொடர்பாக சென்னையில் எச்சரிக்கை நடவடிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
H5N1 எனும் வைரஸானது பெரும்பாலும் பறவைகளிடமிருந்து பறவைகளுக்கே பரவுகிறது. மனிதர்களுக்கும் பரவக்கூடிய அபாயம் உள்ளது.எனவே அவற்றை தொட வேண்டாம் என்று கூறியுள்ளது
உங்கள் வீட்டின் சுற்றுப்புறத்தில் ஏதேனும் பறவை இறந்து கிடந்தால், உடனடியாக சுகாதாரத் துறைக்கோ அல்லது உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கோ (Food Safety Officers) தகவல் தெரிவிக்க வேண்டும்