

அமேஸ்ஃபிட் ஆக்டிவ் மேக்ஸ் அறிமுகம்
Amazfit Active Max Smartwatch Launch Date in India : ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களின் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களில் கிடைக்கும் பெரும்பாலான பீச்சர்கள் மற்றும் பிரீமியம் பில்ட் குவாலிட்டி அமேஸ்ஃபிட் மாடல்களிலும் கிடைக்கிறது.
அதேபோல பிரீமியம் பட்ஜெட்டிலும் இந்த மாடல்கள் வெளியாகி வருகின்றன. இப்போது, அலுமினியம் அலாய் ஃபிரேம், பாலிமர் கேஸ், 5ஏடிஎம் ரெசிஸ்டன்ஸ் உள்ளிட்ட டியூரபிலிட்டியுடன் இது வந்துள்ளது.மேலும், பயோசார்ஜ் எனர்ஜி மானிட்டரிங் , ஆக்டிவிட்டி மானிட்டரிங், ஸ்ட்ரெஸ் மற்றும் ஸ்லீப் மானிட்டரிங் போன்ற முக்கியமான ஹெல்த் மானிட்டர்கள் மற்றும் டிராக்கர்களையும் இந்த அமேஸ்ஃபிட் ஆக்டிவ் மேக்ஸ் ஸ்மார்ட்வாட்ச் கொண்டுள்ளது.
முழு பீச்சர்கள் பிரீமியம் மாடல்களுக்கு நிகராக இருப்பதை பார்க்க முடிகிறது.
ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளே
அமேஸ்ஃபிட் ஆக்டிவ் மேக்ஸ் அம்சங்கள்: ஜெப் ஓஎஸ் 5 (Zepp OS 5) கொண்ட மாடலாக இந்த அமேஸ்ஃபிட் ஆக்டிவ் மேக்ஸ் இருக்கிறது. ஜெப் ப்ளோவ் ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் (Zepp Flow AI Voice Assistant), பயோசார்ஜ் எனர்ஜி மானிட்டரிங் போன்ற பிரத்யேக பீச்சர்களையும் கொடுத்துள்ளது. 1.5 இன்ச் (480 x 480 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உள்ளது.
2.5டி டெம்ப்பர்டு கிளாஸ் மற்றும் ஆன்டி-ஃபிங்கர்பிரிண்ட் கோட்டிங் (Anti-fingerprint Coating) கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், 60 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுத்துள்ளது.
ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளே மாடலாக இருக்கிறது. ப்ளூடூத் 5.3 எல்இ (Bluetooth 5.3 LE) கனெக்டிவிட்டியை கொண்டுள்ளது. ஆகவே, ப்ளூடூத் வாய்ஸ் காலிங் கிடைக்கிறது.
3-ஆக்சிஸ் மோஷன் மற்றும் டெம்பரேச்சர் சென்சாருடன்
இத்துடன் இன்-பில்ட் மைக்ரோபோன் (In-built Microphone) கிடைக்கிறது. இன்-பில்ட் ஸ்பீக்கர் (In-built Speaker) கொடுத்துள்ளது.
பிரீமியம் மாடலாக இருப்பதால், பயோடிராக்கர் 6.0 பிபிஜி பயோமெட்ரிக் சென்சார் (BioTracker 6.0 PPG Biometric Sensor) கிடைக்கிறது.
ஆக்சிலரோமீட்டர் (Accelerometer), 3-ஆக்சிஸ் மோஷன் சென்சார் (3-axis Motion Sensor), பாரோமீட்டர் (Barometer) கிடைக்கிறது. மேலும், ஆம்பியன் லைட் (Ambient Light), டெம்ப்ரேச்சர் சென்சார் (Temperature Sensor) உள்ளது.
ஆகவே, 24 மணி நேர ஹார்ட் ரேட் மானிட்டர், எஸ்பிஓ2 மானிட்டர், ஸ்ட்ரெஸ் லெவல் மானிட்டர், ஸ்லீப் மானிட்டர் உள்ளிட்ட பெரும்பாலான ஹெல்த் டிராக்கர்கள் மற்றும் மானிட்டர்கள் உள்ளன.
ஜிபிஎஸ் (GPS), குளோனாஸ் (GLONASS), கலிலியோ (GALILEO), கியூஇசட்எஸ்எஸ் (QZSS) உள்ளது. சிங்கிள் சார்ஜில் 25 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும்படியான 658mAh பேட்டரியை கொடுத்துள்ளது.
ஹெவி யூசேஜ் செய்தால் 13 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும். மேலும் ஜிபிஎஸ் கனெக்டிவிட்டியுடன் பயன்படுத்தினால், 22 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும்.
ஜெப் கோச், ஜெப் ரன்னிங் கோச் கிடைக்கிறது. விர்ச்சுவல் பேசர், டிராக் ரன் மோட் போன்ற பீச்சர்களும் கிடைக்கிறது.
அமேஸ்ஃபிட் தளத்திலும் கிடைக்கும்
5ATM வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. மியூசிக் கன்ட்ரோல், கேமரா கன்ட்ரோல் போன்ற வழக்கமாக பீச்சர்களையும் கொடுத்துள்ளது.
பிளாக் கலரில் மட்டுமே இந்த அமேஸ்ஃபிட் ஆக்டிவ் மேக்ஸ் ஸ்மார்ட்வாட்ச் கிடைக்கிறது. அமேசான் தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். ரூ.15,999 ஆக விலை இருக்கிறது. அமேஸ்ஃபிட் தளத்திலும் ஆர்டர் செய்து கொள்ளலாம்.